தமிழர்கள் விடுதலைப் புலிகளை மட்டுமே நம்புகின்றனர் - கருத்துக் கணிப்பு. இலங்கை அரசு தன்னிடம் சரணடைந்த தமிழர்களை அடிமைகளாக நடாத்தியதால் சிங்களவர் மீது மிழர்க்கிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் அற்றுப் போய்விட்டது. ஒபாமாவிற்க்கான தமிழர் அமைப்பு நடாத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் 85 விழுக்காடான மக்கள் வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் தமிழர்களை வைத்து பாதுகாப்பதையும் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வெளியிலிருந்து வழங்குவதையும் சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
வாக்கெடுப்பில் கிடைத்த வேறு தகவல்கள்.
பெரும்பாலான மக்கள்(44%) சர்வதேச நாடுகள் இலங்கை ஆயுத ரீதியாக வெற்றி அடைவதையே விரும்புகின்றன என்று நம்புகின்றனர். 23% மான மக்கள் சர்வதேச நாடுகள் அரசியல் அமைப்பு ரீதியான தீர்வை விரும்புவதாகவும் ஆனால் அதற்கு ஆக்க பூர்வமாக எதையும் செய்யவில்லை என்றும் நம்புகின்றர்.
புலிகள் சட்டபூர்வமான விடுதலை இயக்கம் 85% மான மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சட்டபூர்வமான விடுதலை இயக்கம் என்று கருதுகின்றனர்.
நடப்பது இனப்படுகொலையே 90% மான மக்கள் இலங்கையில் நடக்கும் யுத்தம் ஒரு இனப் படுகொலையே என்று கருதுகின்றனர்.
தனி நாடே தீர்வு 90% மான மக்கள் சுதந்திர தமிழ் நாடே தீர்வாகும் என்று வாக்களித்தனர்.
முழு விபரங்களையும்:
http://tamilsforobama.com/ எனும் இணையத்தளத்தில் காணலாம்.