அண்மையில் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதியான லோரன்ஸ் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், புகைப்படங்களில், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றன.
கடந்த முதலாம் உலகப்போரில் இடம்பெற்ற பாரிய உயிரிழப்புகளை தொடர்ந்து, இவ்வாறான உயிரியல் இரசாயன ஆயுதங்கள், சர்வதேச போரியல் பிரகடனத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு இந்த தடைசெய்யப்பட்ட இராசாயன ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தமை வெளிவந்திருந்தன.
இந்த இரசாயன ஆயுதங்களை மீன் பிடிக்கும் போதும், மிருகங்களின் மீதும் கூட பாவிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த வகையில் போராளிகளின் மீது பிரயோகிக்கமுடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
http://www.paristamil.com/tamilnews/?p=35186