பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை Empty
PostSubject: இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை   இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை EmptyWed Mar 11, 2009 1:26 am

சிறீலங்கா படைகள் வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் நோக்கி இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 2:30 மணிமுதல் காலை 10:00 மணிவரை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 200இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் தங்கியிருந்த 300 வரையிலான தற்காலிக தரப்பாள் குடிசைகள் பல்குழல் எறிகணைகளில்

சிக்கி சாம்பலாகி இருக்கின்றன.

மக்கள் நித்திரையில் இருந்த அதிகாலை வேளையிலேயே கொலைவெறிப் படையினர் தாக்குதலை ஆரம்பித்ததால், மக்கள் பாதுகாப்புத் தேடிக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இதனால் மக்கள் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும், பதிவின் வன்னிச் செய்தியாளர் கூறுகின்றார்.

வலைஞர்மடத்திலுள்ள மருந்துக் களஞ்சியமும் தாக்குதலில் சேதமடைந்துள்ளதுடன், மருத்துவர் ஒருவரது மகனும் அந்த இடத்தில் கொல்லப்பட்டிருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கிக்றன. காயமடையும் மக்களுக்குரிய மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், மருந்துக் களஞ்சியமும் தாக்கப்பட்டுள்ளது.

வன்னி மக்களுக்கு எனக் கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொருள்களை இறக்க முடியாத அளவிற்கு காலநிலை காணப்பட்டதுடன், நேற்று சிறிய அளவிலான சூறாவளியும் ஏற்பட், அந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீள முன்னர் அதிகாலை வேளையில் பாதுகாப்பு வலயத்தில் நித்திரையில் இருந்த அப்பாவித் தமிழ் மக்களை படையினர் குறிவைத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு உட்பட பல இடங்களில் படையினர் பாரிய இழப்பைச் சந்தித்து, பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில், பழிவாங்கும் இயலாத்தன்மைத் தாக்குதலை மக்களை நோக்கி திசை திருப்பியிருப்பதாக நம்பப்படுகின்றது.

இன்று மேற்கொள்ளப்பட்ட ஆட்டிலறி, மற்றும் பல்குழல் எறிகணைகளில் கொத்துக் குண்டுகளும் பொருத்தப்பட்டு வீசப்பட்டதால், தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிக்கும் சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து காணப்பட்டன.

அனைத்துலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை, அனைத்துலக கண்டனங்கள் மத்தியிலும் சிறீலங்கா அரசு தமிழ் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து வருகின்ற போதிலும், அனைத்துல நாடுகளோ, ஐக்கிய நாடுகள் சபையோ ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
Back to top Go down
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை Empty
PostSubject: எறிகணைத் தாக்குதல்: இன்று 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை; 254 பேர் காயம்   இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை EmptyWed Mar 11, 2009 1:33 am

இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை G391

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்டவர்களில் 45 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 25 உடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று மாத்தளன் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடுமையான மழை பெய்து வருவதால் எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அப்புறப்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர முடியாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் இம்மாதம் முதலாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை காயமடைந்த நிலையில் 700 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 137 பேர் சிறுவர்கள். இவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என புதுமாத்தளன் மருத்துவமனை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
Back to top Go down
 
இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு
» முல்லைத்தீவு வைத்தியசாலை மீது இன்று மீண்டும் தாக்குதல்
» நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
» காந்தி அன்று சொன்னதைத்தான் பிரபாகரன் இன்று செய்கிறார்."
» சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: