தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு கலைக்கப் பட்டுள்ளதையடுத்து அப்பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களை அவர்களது விருப்பின் பேரில் பொலிஸ் மற்றும் இராணுவ படைப்பிரிவி;ல் இணைத்துக் கொள்ளுவதற்கும், வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று முந்தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் வேளையிலேயே இதுகுறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான ஒத்துழைப்புடனும், அரசாங்கத்தின் உதவியுடனும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் சில இளைஞர்களுக்கு புனர்வாழ்வளித்து வாழ்;வாதார வசதிகளை ஏற்பாடுத்திக் கொடுத்து சுயதொழில்களை ஆரம்பித்து வழிகாட்டவும் கட்சி தீர்மானித்திருப்;பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆயுதப்பிரிவில் இதுவரைகாலமும் தியாக உணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்த உறுப்பினர்களுக்கு கட்சி சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.