baskar
Posts : 88 Join date : 11/03/2009 Location : canada
| Subject: இணையத்தள வலையமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ள புலிகள்!! Sun May 03, 2009 6:16 pm | |
| இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான army.lk இன்று காலை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு இன்று நண்பகல் வரை முடக்கப் பட்டிருந்தது. இது விடுதலைப்புலிகளின் நாசகார செயல்களின் ஒன்றென அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரச இராணுவ யுத்த வெற்றிச்செய்திகள் புகைப்படங்களுடன் இவ் இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றப்படுவதனால் அண்மைக் காலங்களில் அதிகளவான வாசகர்களை கொண்டதளமாக இவ் இணையம் விளங்கியது. ஆனாலும் பல பழைய புகைப்படங்களை இணைத்தும் பல சுத்துமாத்து வேலைகளை மேற்கொண்டும். சிங்கள மக்களை முட்டாள்களாக்கி பலவாறான பொய்ச்செய்திகளையும் வெளியிட்டு இறந்த தமது சகாக்களின் உடல்களை காட்டி புலிகளின் உடல்களென பிரச்சாரம் செய்தும். தமது படை உபகரணங்கள் சிலவற்றை வெளியிட்டு தம்மால் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் என்றும் பல பிரச்சரங்களை இவ் இணையத்தளம் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இன்று காலை முடக்கப்பட்டிருந்த இவ்விணையத்தளத்தில். அரசாங்கத்தினால் செய்யப்பட்ட கொலைகள் பற்றிய படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. பின்னர் நண்பகல் அளவில் இவ்விணையத் தளத்தின் சேவைகள் வழமைக்கு வந்தன. எனினும் இனிவரும் காலங்களில் இணையத்தள வலையமைப்புகளுக்குள் ஊடுருவி பல சைபர் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ள விருப்பதாகவும், பல செய்மதிகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரே நாளில் கொழும்பை முற்றுமுழுதாக முடக்கச் செய்யவும் இவர்க ளால் முடியுமென அத்தகவல் தெரிவிக்கின்றது. | |
|