பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு

Go down 
4 posters
AuthorMessage
Admin
Admin
Admin


Posts : 45
Join date : 10/03/2009

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptySat Mar 14, 2009 12:20 am

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு TRinco_Child_body_1
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் யூட் றெஜி வர்சா என்ற மாணவி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
திருகோணமலை புதிய சோனகத் தெருவில் வடிகானுக்குள் உரப்பை ஒன்றில் போடப்பட்ட நிலையில் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர்.

திருகோணமலை நீதவான் எம்.மனாப் ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனும் ஸ்தலத்திற்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டார்.

3 கோடி ரூபாய்கள் கப்பம் கோரி குழந்தையின் தாயாருக்கு கடத்தல்கார்கள் மிரட்டல் விடுத்தனர். பொலிஸாரிடம் சென்றால் குழந்தை கொல்லப்படுவாள் என எச்சரிக்கப்பட்டதுடன், தந்தையின் வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களையும் கேட்டுள்ளனர்.

விடயத்தை அறிந்த பொலிஸார் இரகசியமாக தேடுதலில் ஈடுபட்டனர்.

இதே நேரம் இன்று காலை புனித மரியாள் கல்லூரி மாணவிகள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அங்கு வந்த வலயக் கல்வி பணிப்பாளர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அடையாளத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள், வகுப்புக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு காலை 10.30 மணியளவில் வகுப்புக்குத் திரும்பினர்.

கடத்தப்பட்ட பெண்குழந்தை கண்கள், வாய், கைகள் கால்கள் என்பன சலோட்டேப் இனால் ஒட்டப்பட்ட நிலையில் உரப்பையினுள் போடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

கொல்லப்பட்டவரின் தந்தை டோஹா, கட்டார் என்னும் இடத்தில் சாரதியாகப் பணியாற்றுகின்றார்.

தாயார் திருமதி யூட் ரெஜி புஸ்பராணி பொலிஸாருக்கும் நீதவானுக்கும் வாக்குமூலம் அளித்தார்.
Back to top Go down
https://kolusu.forumta.net
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: Re: திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptyMon Mar 16, 2009 11:18 am

கடந்த புதன்கிழமை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி யூட் றெஜி வர்ஸாவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எண்மர் திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் மற்றும் கொலையாளிகள் என கைது செய்யப்பட்டுள்ளோரில் முதலமைச்சர் பிள்ளையானது முக்கிய சகாவாகிய ஜனா மற்றும் வவுனதீவு பிரசேசபை உறுப்பினர் சுறங்க உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர், கணனி பயிற்சி நிலையம் ஒன்றின் பயிற்றுவிப்பாளர் ஒருவர் மற்றும் ஆட்டோ சாரதிகள் இருவர் என எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சிறுமியை பாடசாலையில் இருந்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே வீட்டிற்கு அழைத்துவருவது வழமை. சம்பவதினம் வழமையான முச்சக்கரவண்டி செல்வதற்கு முன்னர் பிறிதொரு முச்சக்கரவண்டியில் பாடசாலக்கருகில் சென்ற கணனி பயிற்றுவிப்பாளர் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். வழமையாக சிறுமியின் வீட்டிற்கு சென்று கணனி பயிற்றுவிக்கும் இந்த மனிதருடனான பரீட்சயத்தில் சிறுமி அவருடன் சென்றுள்ளார்.

சிறுமியை பாடசாலை முடிந்து அழைத்துச் செல்லும் முச்சக்கரவண்டிச் சாரதி அங்கு சென்றபோது சிறுமி அங்கில்லா விடயத்தை தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். விடயத்தில் மிகவும் பதற்றமடைந்த தாயார் பரிதவித்துக் கொண்டிருக்கையில் தொலை பேசி அழைப்பை ஏற்படுத்திய கடத்தல் காரர்கள் தாம் குழந்தையை கடத்தி வைத்துள்ளதாகவும் 3 கோடி ரூபா பணம் தந்தால் குழந்தையை விடுவிப்பாதாகவும் அன்றேல் கொலை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் கட்டார் நாட்டில் சாரதியாக தொழில் புரிந்துவரும் சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் தாம் குழந்தையை கடத்தி வைத்திருக்கும் செய்தியை தெரிவித்து 3 கோடி ரூபா பணத்தை கோரியுள்ளனர். இப் பேரம் பேசல்களின் போது பணம் திருமலை மாவட்டத்திற்கு வெளியே அல்லது வெளிநாடொன்றில் பரிமாறப்பட வேண்டும் என நிபந்தனை விதித்த கடத்தல் காரர்கள் குழந்தை சம்பந்தமாக பேசும் போது குழந்தையை அவளது தகப்பன் அழைக்கும் செல்லப் பெயரைப் பிரயோகித்துள்ளனர். இச்செல்லப்பெயர் விடயத்தில் சந்தேகம் கொண்ட தந்தை இக்கடத்தலில் தமது குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்க தொடங்கினார். அத்துடன் குழந்தை அழுவதை பிரதி செய்து அது கணனி ஊடாக தகப்பனுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்விருவிடயங்களையும் ஒப்பிட்டு சிந்தித்த தந்தையாருக்கு கணனி பயிற்றுவிப்பாளர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தனது சந்தேகத்தை தந்தையார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து கணனி பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது பல தகவல்கள் வெளிவந்துள்ளது. பொலிஸ் விசாரணைகளில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருமலை ஓர்சில் முகாமில் தடுக்து வைக்கப்பட்டுள்ளது வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அம்முகாமில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் முகாமை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாகவும் முகாம் வெற்றிடமாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.

கணனி பயிற்றுவிப்பாளர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குழந்தையை கடத்த ஒத்தாசை புரிந்த முச்சக்கர வண்டிச் சாரதி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட பொறுப்பாளர் ஜனா, வவுனதீவு பிரதேச சபை உறுப்பினர் சுறங்க, பாண்டியன், நிசான் ஆகிய நால்வர், தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் நட்பை பேணி வந்த பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மற்றும் குழந்தையை வழமையாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் சிறுமியை மயங்க வைப்பதற்கு மயக்க மருந்து கொடுத்துதவிய வைத்தியர் ஒருவர் தேடப்படுகின்றார்.

பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞனின் தாயார் திருமலை குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தராவார். இவ்விடயத்தில் தனது மகன் ஈடுபட்ட அவமானத்தை தாங்க முடியாத தாயாரான பொலிஸ் அதிகாரி விசமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது. விசாரணைகளை பொலிசார் மிக தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், சற்று நேரங்களுக்கு முன்னர் விசாரணையின் நிமித்தம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த நிசான் என்பவரை ஜீப் வண்டியில் அழைத்துச் செல்லுகையில் அவர் தப்பி ஒட முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் மேற்படி சந்தேக நபர் இடை வழியில் வைத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் கழுத்தை கடித்துத் தப்ப முயன்றதாகவும் இதன்போது பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு ஐரோப்பிய நேரம் 10 மணிக்கு டண் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான அவர்களிடம் பல மக்கள், இக்கொலை தொடர்பாக வினவியபோது அதற்கு பதிலளித்த அசாத் மௌலான அவ்விடயத்தில் தமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விடயத்தை முற்றாக மறைத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு அவர் கைது விடயத்தை வெளிவிடாமல் மறைத்ததற்கான காரணம் தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமது சகாக்களை தப்பவைத்துக்கொள்ள மேற்கொண்டுவரும் முயற்சிகள் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பிலாகும் என அர்த்தப்படுத்தலாம். ஆனால் திருமலை பொலிஸ் உயர்மட்ட தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை துரித கதியில் முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதி உயர் தண்டனையை பெற்று கொடுப்பர் என தெரியவருகின்றது.
Back to top Go down
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: சிறுமியின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptyTue Mar 17, 2009 9:53 pm

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Santh2

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Santh7

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Santh5

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Santh6
Back to top Go down
nallavan

nallavan


Posts : 9
Join date : 14/03/2009

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: Re: திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptyWed Mar 18, 2009 1:12 pm

திருக்கோணமலை வர்சா கொலை வழங்கின் சந்தேக நபர்கள் அண்மைக்காலத்தில் திருக்கோணமலை யில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சுமார் 35 குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றதாக அவர்கள் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

தங்களால் கொல்லப்பட்ட படமாளிகையின் முகாமையாளர் ஒருவரையும், பேரூந்து நடத்துனர் ஒருவரையும் படகில் கொண்டு சென்று கடலில் வைத்து கொலை செய்து கடலில் சடலத்தை போட்டுவிட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனார்த்தனின் உதவியுடன் இவைகள் செய்ப்பட்டதாக அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்விடயத்தை ஜனார்த்தனன் மறுத்துள்ளார்.
Back to top Go down
nallavan

nallavan


Posts : 9
Join date : 14/03/2009

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: Re: திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptyFri Mar 20, 2009 1:24 am

சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய ரி.எம்.வி.பி உறுப்பினர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார்

திருகோணமலையில் சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய ரி.எம்.வி.பி உறுப்பினர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையில் கடந்த வாரம் ஜூட் ரெஜி வர்ஷா (வயது 6 ) என்ற சிறுமியை கடத்தி கப்பம் கோரி பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்புடைய சந்தேகத்தில் 6 பேர் கைதான போதிலும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார்.

ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என காவல்துறை தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

இன்று உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து காவல்துறையினரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கபப்ட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துள்ளனர்.

சயனைட் உட்கொண்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்ட போதிலும் பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது

திருகோணமலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க பல வழிகளாலும் முயற்சிகள் இடம் பெறுவதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதை தெரிவித்த அவர் அம்முயற்சியின் ஒரு பகுதியாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரை இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இக்கொலை தொடர்பான விசாரணைகள் திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன அவர்களின் தலமையில் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Back to top Go down
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: Re: திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptyMon Mar 30, 2009 1:30 am

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு 29_03_10
Back to top Go down
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: கருணா வர்ஷா கொலை தொடர்பாக வழங்கிய பேட்டி   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptyMon Mar 30, 2009 1:39 am

கருணா (முரளிதரன்) வர்ஷா கொலை தொடர்பாக வழங்கிய பேட்டி. தொடர்ந்து வாசிப்பதுக்கு பின்வரும் linkயை அமுத்தவும்..............

http://www.ilankainet.com/2009/03/blog-post_1118.html
Back to top Go down
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: Re: திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு EmptyWed Apr 01, 2009 2:48 am

திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில் அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்றுடன் சந்தேக நபர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Back to top Go down
Sponsored content





திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty
PostSubject: Re: திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு   திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு Empty

Back to top Go down
 
திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!!
» புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: