பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!!

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!! Empty
PostSubject: மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!!   மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!! EmptySun May 03, 2009 6:19 pm

மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!! Thinushiya
கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!! புலனாய்வுப் பிரிவினரும் ஆயுதக் குழுக்களும் கூட்டு!! புலனாய்வுத் தகவல்!!

மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டை முனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை வாயிலில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட மூன்றாம் ஆண்டு மாண வியான சதீஸ்குமார் தினுஷிகா (வயதுCool நேற்றுகாலை பாடசாலையிலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள வள வொன்றினுள் பாழடைந்த கிணற்றுக்குள்ளிருந்து சடல மாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கடத்தல் தொடர்பான செய்திகள் மர்மமாகவே இருந்தாலும். எமது செய்திச் சேவைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. உடற்பயிற்சி ஆசிரியரான இவரது தந்தையார் சதீஸ்குமார் காந்திராஐ 2002 ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டிருந்தார். தற்பொழுது பிள்ளையானின் வலதுகையான சீலன் அப்பொழுது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். இவரே இச்சிறுமியின் தந்தையின் கடத்தலில் முக்கிய பங்கு வகித்திருந்தார். பின்னர் கருணா குழுவி னரிடம் ஒப்படைக்கப்பட்டு சீலனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மகள் தினுஷிகா நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டார். இவரது கண்கள் இரண்டும் தோண்டப் பட்டிருந்ததாகவும், அடிவயிற்றில் கீறல் போன்ற அடையாளம் காணப்பட்ட தாகவும் நேரில்பார்த்த எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். சில வேளைகளில் இவரது கண்களும், சிறுநீரகமும் அகற்றப்பட்டிருக்க வாய்ப்புக்களும் உள்ளன. எனினும் இச்சிறுமி கடத்தப்பட்டவுடன் 30 இலட்சம் ரூபா கப்பமாகக் கேட்கப்பட்ட தாகவும். இவரது வீட்டார் சம்மதம் தெரிவித்து நேற்றுக் காலை அப்பணத்தை கொடுப்பதற் குறிய ஒழுங்கு களை மேற்கொண்டிருந்த வேளையிலே இவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் கடத்தப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை வாயிலில் சந்தேகத் திற்கிடமான இருவர் நடமாடியதாகவும் அப்பொழுது அவ்வழியால் வந்த பொலி ஸாரின் ஜீப்பிற்குள் இருந்த ஒருவருக்கு இருவரும் கைகாட்டிவிட்டு நின்றதா கவும் அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தகவல் தந்துள்ளார்.

இச்சிறுமியின் கொலையில் முக்கிய கொலையாளியாக இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ரதீஸ்குமார் சம்பந்தப்பட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை இச்சிறுமியின் குடும்பத்தவர்களும் உறுதிப் படுத்தியுள்ளனர். இச்சிறுமியின் தந்தை கடத்தப்பட்டபின்னர் அடிக்கடி விசார ணைக்கென இவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்து சென்றதாக தகவலொன்று தெரிவிக்கின்றது. கடந்தவருடம் இச்சிறுமியில் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் இருந்த தபாலதிபாரான சுஜி என்பவரின் கடத்தலிலும் ரதீஸ்குமாரும், சீலனும் சம்பந்தப்பட்டிருந்தனர். இவர் முன்னர் இராணுவப்புலனாய்வுப்பிரிவின் முக்கி யஸ்தர்களான புளொட்மோகனுடனும், நிஷாம் முத்தலிப்புடனும் சேர்ந்து இயங்கியவர். மட்டக்களப்பில் அதிகமான இளைஞர்கள் காணாமல்போனதுக்கும், படுகொலை செய்யப்பட்டமைக் கும் இவர்களும் காரணமாக இருந்தனர். புளொட் மோக னும், நிஷாம் முத்தலிப்பும் தற்பொழுது உயிருடன் இல்லாததனால் ரதீஸ்குமார் இராணுவ புலனாய்வுப் பிரிவில் முக்கிய பதவியொன்றில் இருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர் கருணாகுழு முக்கி யஸ்தர்களுடனும், பிள்ளையான்குழு முக்கியஸ் தர்களுடனும் மிக நெருக்கமாக உறவுகளைப் பேணிவருகின்றார். புலனாய்வுப் பிரிவில் வேலை செய்கின்ற சில இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காகவே பணம் தமக்கு தேவைப் படுவதாக தொலைபேசிமூலம் இவர் கேட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரி விக்கின்றனர்

http://meenagan.blogspot.com/2009/05/blog-post_02.html
Back to top Go down
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!! Empty
PostSubject: Re: மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!!   மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!! EmptySun May 03, 2009 6:21 pm

மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!! 3487574109_a9a08f5a37_mகடைகளைப் பூட்டினால் கொலைகள் தொடரும்!! இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!!
மட்டக்களப்பில் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட 8 வயதான சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மக்கள் மூன்றுநாளைக்கு ஹர்த்தாலொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இன்றுமுதல் மூன்று நாளைக்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முடிவாகியிருந்தவேளை இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மிரட்டப்பட் டுள்ளதாக வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணியளவில் மட்டக்களப்பை கதிகலக்கிவரும் மோட்டார் சைக்கிள் குறூப் பான அப்பாச்சி குறூப் ரோந்து வந்ததாகவும் இவர்களுடன் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் முகாமிலிருந்து பள்சர் மோட்டார் சைக்கி ளொன்றில் வந்த இருவர் கடைகளுக்குள்ளிருந்த சில வர்த்தகர்களை வெளியே அழைத்து யாராவது கடைகளை மூடினால் இந்தச் சிறுமிக்கு நடந்ததைப்போன்று தொடர்ந்து நடக்கும் என தமிழில் எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறுமி தினுஷிகாவின் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கும் முக்கிய கொலையாளியான புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ரதீஸ்குமார் என அடையாளம் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர்கள் முற்றாக மூடிமறைக்கப் பட்ட தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் இவர்களின் நடவடிக்கைகளை வைத்து ஒருவர் ரதீஸ்குமாராக இருக்கலாம் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://meenagan.blogspot.com/2009/05/blog-post_7965.html
Back to top Go down
 
மட்டக்களப்பில் கடத்தப்பட்டசிறுமி சடலமாக மீட்பு!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக மீட்பு
» மட்டக்களப்பில் மூடப்பட்டுவரும் துணை ஆயுதக் குழுக்களின் முகாம்கள்.
» புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: