பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  SearchSearch  RegisterRegister  Log in  

 

 புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு

Go down 
AuthorMessage
baskar

baskar

Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு Empty
PostSubject: புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு   புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு EmptySat Apr 04, 2009 2:55 am

புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு

வவுனியாவில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் புளொட் அமைப்பின் முகாம் ஒன்றில் இருந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 2 வர்த்தகர்கள் உட்பட 8 பேர் காவல்துறையின் சிறப்பு குழுவினால் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புளொட் அமைப்பின் அரசியல் அலுவலகம் என்று இதுவரை காலமும் சொல்லப்பட்டு வந்த முகாமில் இருந்தே இந்த 8 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட வர்த்தகர்களும், ஏனைய அப்பாவிப் பொதுமக்களும் வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் கப்பம் பெறும் நோக்கத்துடன் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போனமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறையின் சிறப்பு பிரிவினரே புளொட் அலுவலகத்தில் குறிப்பிட்ட இரண்டு வர்த்தகர்கள் உட்பட எட்டுப் பேர் கப்பம் கோரித் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

தடுத்து வைக்கப்பட்டவர்களைக் கண்டு பிடித்ததையடுத்து புளொட் அமைப்பின் அலுவலகமும் காவல்துறையினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இதன் போது சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்தக் கடத்தல் மற்றும் கப்பம் கோரல் தொடர்பாக புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் மூவர் மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.paristamil.com/tamilnews/?cat=23
Back to top Go down
 
புளொட் முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 8 பேர் காவல்துறையால் மீட்பு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: அதிர்வுப் பக்கம்-
Jump to: