பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்,

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், Empty
PostSubject: கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்,   கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், EmptyWed Mar 11, 2009 1:45 am

கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், 3343675001_c6539ff857_m கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், 3343674659_79e56c1067_m கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், 3343674357_0c38561ca7_m

மாத்தறை, கொடபிட்டியவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் அமைச்சர் மஹிந்த விஜயசேகர உட்பட 44 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. அக்குறஸ்ஸ கொடப்பிட்டிய ஜும் ஆ பள்ளிவாசலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்று மீலாத் வைபவமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இந்த மீலாத் வைபவத்தில் அமைச்சர்களான மஹிந்த விஜயசேகர, ஏ.எச்.எம். பௌஸி, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எஸ்.எச். அமீர் அலி உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தற்கொலைத் தாக்குதலில் தெவிந்தர பிரதேச சபைத் தலைவர் லிண்டன் அபேதீர, அக்குறஸ்ஸ பிரதேச சபையின் உப தலைவர் உபாலி சரத்சந்திர, குபுறுபிட்டிய பிரதேச சபையின் உப தலைவர் திலக் விஜேசேகர, அத்துருலிய பிரதேச சபை உறுப்பினர் அநுரவிக்கிமசிங்க ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தரப்பு ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கையில், இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலெனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 44 மேற்படடோர் அக்குறஸ்ஸ, மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்று கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜயசேகர மேலதிக சிகிச்சைக்காக விசேட ஹெலிக்கப்டர் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Back to top Go down
 
கொடப்பிட்டிய மீலாத் விழா நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்,
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மிகப்பயங்கரமான இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்!!
» முல்லைத்தீவு வைத்தியசாலை மீது இன்று மீண்டும் தாக்குதல்
» பளை, முகமாலை, கிளாலி நோக்கி விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்
» அம்பாறை சொறிக்கல் முனையில் TMVP முகாம் மீது தாக்குதல்
» இன்று மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: