ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை நிலைவரம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கும் முயற்சிகளில் ஈடு பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், அந்த நாட்டின் பொதுநல வாரிய மற்றும் வெளிவிவகார துறை அமைச்சர் பில் ரம்மெல் தெரிவித்ததாவது,
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையுடனும் பொதுநலவாயத்தில் உள்ள எமது சகாக்களுடனும் தொடர்ந்தும் பேச்சுகளை மேற்கொண்டு வருகிறார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. பிரிட்டிஷ் அரசு இலங்கையின் மனிதாபிமான நிலைகுறித்தும், மோதலில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் நிலைபற்றியும் கவலையடைந்துள்ளது.
கடந்த ஜனவரியிலிருந்து இலங்கை இராணுவம் கண்டுள்ள முன்னேற்றம் காரணமாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மாத்திரமல்ல அப்பாவிப் பொதுமக்களும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் சுதந்திரமாக செய்தி வெளியிட இயலாமையால் உறுதியான புள்ளி விவரங்களைப் பெறமுடியாத நிலையுள்ளது. காஸாவில் நிகழ்ந்ததை எவரும் நியாயப்படுத்த முடியாது. அதேவேளை, இந்த விசயத்தில் புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை