அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் துரதிஸ்டவசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் முக்கியமாக கிழக்கு மக்களின் இரத்தங்களை உறையவைத்த “மூன்றுகோடி ருபாய்கள் கப்பம் கோரப்பட்டு திருகோணமலையைச்சேர்ந்த பத்து வயது சிறுமி ஜூட் மேரி வர்ஷா என்ற பாடசாலை மாணவியை கடத்திச் சென்று படுகொலை செய்த கோரச்சம்பவம் தொடர்பாக திருமலை ஒரிஸ் ஹில் த.ம.வி.புலிகள் காரியாலய பொறுப்பாளர் மற்றும் ஐவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் முடிவில் நிரூபணமாகியது. இச்சம்பவத்துடன் த.ம.வி.புலிகளின் தொடர்பு பற்றி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) அவர்களிடம் லங்காதீப பத்திரிகை வினவிய பொழுது அவர் வழங்கிய பதில்கள்.கேள்வி : கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் மனித படுகொலைகளுக்கும், கப்பம் பெறல் தொடர்பாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பெயர் அடிபடுகிறதே?
அம்மான் : ஆம்., த.ம.வி.புலிகள் அமைப்பிலுள்ள சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இவற்றில் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர். சீலன், ஜெயந்தன், கைலேஷ்வரராஜா ஆகிய முக்கிய நபர்களை குறிப்பிடலாம். பொலிசார் இவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டியவண்ணமுள்ளனர்.
கேள்வி : த.ம.வி.புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாக கூறுகின்றனர், அப்படியானால்………….
அம்மான் : ஆமாம் ஒப்படைத்தார்கள், ஆனால் அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைக்கவில்லை, அது ஒரு கண்துடைப்பு. அவர்களிடம் சிறியவகை ஆயுதங்கள் இருக்கின்றன. அதில் பிஸ்டல் வைத்திருக்கும் பிஸ்டல் குழுவினர்தான் இப்படிப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடுகின்றனர்.
கேள்வி : அண்மைக்காலங்களில் உங்கள் கட்சியைச்சேர்ந்தவர்கள் பலரை சுட்டுக்கொன்றவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளா?
அம்மான் : இல்லை, அது எல்.றி.றி
கேள்வி : அதை எப்படி நீங்கள் உறுதியாகச் சொல்கிறீர்கள்?
அம்மான் : புலன் விசாரணைகளின் அடிப்படையிலேயே நான் அப்படிச் சொன்னேன்.
கேள்வி : த.ம.வி.புலிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்துவிட்டார்களாம், அப்படிப்பட்டவர்கள் இப்படியான அருவருப்பான சட்டவிரோதமான நடவடிக்கைகளைச் செய்வது ஏன்?
அம்மான் : வௌ;வேறு கருத்துக்களை யுடையவர்கள் வௌ;வேறு கட்சிகளில் இருக்கத்தான் செய்கிரார்கள், புலிப்பயங்கரவாதிகளைப் போன்று பிரிவினைவாதிகள் இவ்வமைப்பிலும் இருக்கிரார்கள், அவர்கள்தான் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளைச் செய்கிறார்கள்.
கேள்வி : கிழக்கின் இப்படிப்பட்ட துரதிஸ்டமான நிலமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கதைத்திருந்தீர்களா?
அம்மான் : ஆம் நான் பல சமயங்களில் இது தொடர்பாக அவரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.
கேள்வி : அவர் அவற்றை ஏற்றுக் கொண்டாரா?
அம்மான் : நான் அறிந்த வகையில் அவர் அவற்றை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
கேள்வி : கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் இது போன்ற இஸ்திரமற்ற பதற்றமான சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?
அம்மான் : தற்பொழுது கிழக்கிலுள்ள ஆயுதபாணிகளை நிராயுதபாணிகளாக்கி மக்கள் சுகந்திரமாக தமது காரியகருமங்களை மேற்கொள்வதற்கான அமைதியான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி : சிறிலங்கா சுகந்திரக் கட்சியுடன் இணையக்கூடாதென முன்னைய த.ம.வி.புலிகள் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் சிலரினால் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது, அது உண்மையா?
அம்மான் : ஆம் கட்சி மாறுபவர்களுக்கு அப்படியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, அப்படிப்பட்டவர்கள் தமது எதிர்ப்பைக்காட்டுவதற்கு அண்மையில் வாழைச்சேனையில் பேருந்து ஒன்றுக்கு தீ வைத்துள்ளனர்.
http://kilakku.com/?p=2611