ஆப்கானிஸ்தான் தெற்கு பகுதியில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான போரில் அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டணிப் படைகள் தோல்வியடைந்துள்ளதாக ஜெனரல் டேவிட் மெக்கியர்னன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு 17 ஆயிரம் அமெரிக்கத் துருப்பினர் கூடுதலாக அனுப்பப்படவுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் நாட்டின் தென்பகுதியிலேயே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கூடுதல் படையினர் வருவதன் விளைவாக தெற்கு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு சூழல் இந்த ஆண்டுக் கடைசியிலிருந்து மேம்படத் துவங்கும் என்றும் தெரிவித்தார்.
எனினும் உள்ளூர் மக்களின் ஆதரவை தாம் வென்றெடுப்பதில் உதவக்கூடிய தொடர்ச்சியான பாதுகாப்பினை தம்மால் வழங்க முடியாது இருப்பதனால் கிளர்ச்சிக்காரர்களுடனான மோதலில் தோல்வியை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.