வரலாற்றுச்சிறப்புமிக்க நல்லைக் கந்தன் பெருந்திருவிழா, நேற்று முற்பகல் பத்து மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத் துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.
அதிகாலை முதல் இடம்பெற்ற பூசை களைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு வசந்தமண்டபப் பூசை நடைபெற்று முரு கன் கொடித்தம்பத்துக்கு எழுந்தருளினார்.
ஆலய மணிகள் ஓங்கி ஒலிக்க, அந்த ணர்களின் வேதபாராயணம் காற்றுடன் பரந்து சங்கமிக்க, நாதஸ்வர தவில் கான மழை சொரிய பக்தர்களின் பக்தி கோஷங் களுடன் கொடியேறியது.
கொடியேற்றத்தைக்காண அதிகாலை முதலே குடாநாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் ஆலயத்தை நோக்கி அலை அலையாக வரத்தொடங்கினர்.
நேற்றைய உற்சவத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர் என்று உத்தே சமாக மதிப்பிடப்பட்டது. பங்குகொண்ட பெண்களில் பெரும் எண்ணிக்கையான வர்கள் சேலை அணிந்திருந்தனர். ஆண்கள் வேட்டியுடன் காணப்பட்டனர்.
பக்தர்கள் ஆலய வீதிகளில் காலணி இன்றி நடமாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆலய வாசலில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் ஆண்கள் மேலங்கிகளைக் களைந்துசெல்லுமாறும், தொலைபேசி, புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் தென்பகுதி மக்களிடம் கண்டிப்பாக எடுத்துக்கூறி யபடி இருந்தனர்
Thanks Sankathi