புலிகளின் மீதான தடையை நீக்குங்கள் தமிழீழம் மலரும் 6 மாதத்தில்: தென்காசியில் சீமான்
விடுதலைப்புலிகள் மீது உலக நாடுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், நீக்கினால் அடுத்த 6 மாதத்தில் தமிழீழம் மலரும் என்று தென்காசியில் நடந்த கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியுள்ளார்.
திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் மற்றும் திருநெல்வேலி தமிழர் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர் பேரவை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டம் தென்காசியில் நடந்தது. வக்கீல் மாடசாமி தலைமை வகித்தார். நெல்லை வழக்கறிஞர்கள் சங்க செயலா ளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். வக்கீல் முரு கேசன் வரவேற்றார். இயக்குனர்கள் சிபி, சிவா, ஆர். கே.செல்வமணி ஆகியோர் பேசினர்.
இயக்குநர் சீமான் பேசியதாவது:-
எனது ஒரே தலைவன் பிரபாகரன், எனது இனத்திற்கான விடுதலை தனித்தமிழ் ஈழத்தில் தான் உள் ளது. ஆரம்பத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த தா.பாண் டியன் பின்னர் வரலாற்று புரிதல் காரண மாக தனது கொள்கையை மாற்றிக்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் மாற்று கருத்து உள்ளது. காலம் உங்களையும் மாற்றும். இந்தியாவில் தமிழன் ஒருவன் பிரதமராகலாம். ஆனால் இலங்கையில் ஒரு தமிழன் பிரதமர் ஆக முடியாது. இலங்கையில் தமிழ் மாணவன் 80 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்வில் தேர்ச்சி பெறமுடியும். ஆனால் சிங்களன் 35 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றுவிடுவான்.
இந்திய ராணுவத்தில் தமிழன், கன்னடன், யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இலங்கை ராணுவத்தில் ஒரு தமிழன் சேர முடியாது. தலாய் லாமா சீனாவிலிருந்து தனி நாடு பிரித்து கேட் டால் அடைக்கலம் கொடுக்கிறீர்கள். பாகிஸ் தானிலிருந்து பங்களாதேசத்தை பிரித்து கொடுத்தீர்கள். ஆனால் இலங்கையில் தமிழன் தனி நாடு கேட் டால் ஆதரவு தர மறுக்கிறீர்கள். இலங்கையில் தீராத பகையை மூட்டியது இந்திய தேசம் தான். நடைபெறவுள்ள தேர்தலில் பணமா அல்லது இனமா என்பதை தீர்மானித்து தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும்.
ஜெயலலிதா வெற்றி பெற்றால் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத்தருவோம் என்று அறிவித்துள்ளார். ராணுவம் எங்களுக்கு வேண்டாம். மாறாக உலக நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையை நீக்கித்தாருங்கள். 6 மாதத்தில் தனி ஈழம் மலரும். இவ் வாறு அவர் பேசினார்.
இயக்குனர் செல்வ மணி பேசுகையில், “ராஜீவ் காந்தி கொலை ஏன் நடந்தது என்று படம் எடுத்த காரணத்தால் 18 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை என்ற எனது படத்தை திரையிட அனுமதிக்கவில்லை. தமிழக மக்களின் முதல் எதிரி காங்கிரஸ். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முதன்முதலில் குரல் கொடுத்த தேசிய கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான். எனவே தென்காசி தொகுதி வாக்காளர்கள் கதிர், அரிவாள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகிறோம்” என்றார்.
மூலம்: மீனகம்.கொம்