பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 சேவக் அதிரடி தொடரும்

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

சேவக் அதிரடி தொடரும் Empty
PostSubject: சேவக் அதிரடி தொடரும்   சேவக் அதிரடி தொடரும் EmptyWed Mar 18, 2009 11:39 pm

சேவக் அதிரடி தொடரும் Shewak
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அதிரடி காட்டிய சேவக், டெஸ்ட் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார்,” என நம் பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் தோனி. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று துவங்குகிறது. டெஸ்ட் தொடர் குறித்து தோனி அளித்த பேட்டி: டெஸ்ட் தொடரின் முக்கிய வீரராக சேவக் ஜொலிப்பார். வழக்கம் போல இயல்பான ஆட்டத்தை அவர் தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். நியூசிலாந்து பவுலர்களை சேவக் இம்முறையும் சிதறடிப்பார்.

சேவக் 2 அல்லது 3 மணி நேரம் நிலைத்து நின்று விளையாடும் பட் சத்தில், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து விடும். அதிக ரன்களை சேஸ் செய்வதற்கு சேவக் கின் அதிரடி உதவும். ஆட் டத்தின் போக்கை தலைகீழாக மாற்றக் கூடிய திறமை சேவக்கிற்கு உண்டு. அணியின் வீரர்கள், தங்களது இயல்பான ஆட் டத்தையே எப்பொழுதும் வெளிப்படுத்த வேண்டும். அதையே நான் விரும்புவேன். அணிக்கும் அது தான் நல்லது. கடந்த ஒன் றரை ஆண்டு கால இந்திய அணியின் வெற்றிப்பயணம் தனி ஒரு வீரரை நம்பி இல்லை. அணியின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம்.

எதற்கும் தயார்: நியூசிலாந்தில் அடிக்கடி இயற்கை மாற்றம் நிகழ்கிறது. 15 முதல் 20 நிமிடங்களுக்குள் வானிலை முற்றிலும் மாறி விடுகிறது. உடனடியாக மேகம் சூழ்ந்து விடுகிறது. இங்கு நிலவி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப சமாளிப்பது சற்று கடினம். இருப்பினும் எதற்கும் தயாராக உள்ளோம். டாஸ் ஜெயிக்கும் பட்சத்தில், முதலில் பேட்டிங் அல்லது பவுலிங் தேர்வு செய்வதில் கவனம் தேவை. தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளம் முதல் 2 மணி நேரம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க் கிறேன். மூன்று வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது நல்லது. இருப்பினும் மூன்றாவது பவுலரை இன்னும் தேர்வு செய்யவில்லை.

வித்தியாசமான முறை: டெஸ்ட் போட்டிகள் நியூசிலாந்து நேரப்படி நண்பகல் 12 மணிக்கு துவங்குவது ஆச்சர்யம் அளிக்கிறது. இது முற்றிலும் புதிய அனுபவம். தவிர, கிரிக்கெட் அரங்கில் புதிய அணுகு முறையாக உள்ளது. பகல் 12 மணிக்கு போட்டி துவங்கினால், இரவு வரை நடைபெறும். இது வீரர்களுக்கு கஷ்டம் அளிக்கும் விஷயம். இவ்வாறு தோனி கூறினார்.

மாற்றம் இல்லை: இரவு போட்டிக்கு அதிருப்தி தெரிவித்த தோனியின் வேண்டுகோளை பரிசீலித்த நியூசிலாந்து கிரிக் கெட் போர்டு, இன்று துவங்க உள்ள முதல் போட்டிக்கு இனி நேரம் மாற்றம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த இரண்டு போட்டிகளின் நேரத்தை மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளது.

வெட்டோரி உறுதி: ஒரு நாள் தொடரின் தோல் விக்கு, டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுப்போம் என நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “” இந்திய அணியில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நியூசிலாந்து அதற்கு எதிர்மாறாக உள்ளது. இருப்பினும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். ஜேம்ஸ் பிராங்க்ளின் அணிக்கு திரும்பியது வரவேற்கத்தக்கது. ஆல்-ரவுண்டராக அவர் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். தவிர, அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப் பார்கள்,” என்றார்.
Back to top Go down
 
சேவக் அதிரடி தொடரும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பிரபாகரன் மரணம்? தொடரும் சர்ச்சைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: விளையாட்டு :: கிரிக்கெட்-
Jump to: