இலங்கையில் மனிதாபிமான யுத்த நிறுத்தமொன்று ஏற்படுவதனை தவிர்க்க முடியாதென இந்திய இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரச படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் பிரவேசித்ததன் பின்னர் தற்காலிக யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாத தேவையாக உருவெடுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மோதல் தவிர்ப்பு வலயத்தில் சுமார் 150,000 அப்பாவிச் சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக யுத்த நிறுத்த அமுலாக்கல் குறித்து சர்வதேச ரீதியாக தொடர்ச்சியாக பிரயோகித்து வரும் அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் புறக்கணிக்க முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவிலியன் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விவகாரப் பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் பரிந்துரை செய்த 5 கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, விரைவில் இலங்கை அரசாங்கம் தற்காலிக யுத்த நிறுத்த காலமொன்றை அறிவிக்கலாம் என இந்திய ஊடகங்கள் எதிர்வு கூறியுள்ளன