முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக உண்மையான தகவல்களை வெளியிட்ட தவறுக்காக முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ளது.
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் 13 பேர் உணவின்றி உயிரிழந்ததாகவும் மருந்துப் பொருட்கள் இன்றி 500 பேர் உயிரிழந்தனர் என இவர் தவறான தகவல்களை வழங்கி, பிரதி சுகாதார பணிப்பாளர், அமைச்சை அசௌகரியத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கும் சுகாதார அமைச்சு இது, சம்பந்தமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த விசாரணையின் பின்னர், வரதராஜா பணி இடைநிறுத்தம் செய்ய தீர்மானித்ததாகவும் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதிச் சுகதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதனால் ஆத்திரமடைந்திருக்கும் இலங்கை அரசு இவரை பணியில் இருந்து இடைநிறுத்த உள்ளதாக எமது கொழும்பு நிருபர் தெரிவித்தார்.
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1238736096&archive=&start_from=&ucat=3&