பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 திருமலை பேக்கரியில் வாங்கிய உணவுகளை உண்டவர்களில் வைத்தியசாலையில்

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

திருமலை பேக்கரியில் வாங்கிய உணவுகளை உண்டவர்களில் வைத்தியசாலையில் Empty
PostSubject: திருமலை பேக்கரியில் வாங்கிய உணவுகளை உண்டவர்களில் வைத்தியசாலையில்   திருமலை பேக்கரியில் வாங்கிய உணவுகளை உண்டவர்களில் வைத்தியசாலையில் EmptyTue Mar 24, 2009 5:51 pm

திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களும் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. வெதுப்பகமொன்றிலிருந்து கொள்வனவு செய்த பொருள்களை உட்கொண்ட 107 மாணவர்கள் சுகவீனமுற்றதைத் தொடர்ந்தே அனைத்து வெதுப்பகங்களும் சீல் வைக்கப்பட்டள்ளன.

வெதுப்பகமொன்றில் கொள்வனவு கொள்வனவு செய்த பாணை உற்கொண்ட திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து திருகோணமலையிலுள்ள பாடசாலைகளில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைகளுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் 107 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதுடன், 4 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எமது செய்திப் பிரிவுக்குக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களையும் மூடி சீல்வைத்துள்ளனர்.

எனினும், அச்சமடைந்த மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதால் திருகோணமலை நகரில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பதற்றம் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு உணவு விஷமானது என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
Back to top Go down
 
திருமலை பேக்கரியில் வாங்கிய உணவுகளை உண்டவர்களில் வைத்தியசாலையில்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வன்னியில் இருந்து திருமலை வருவோரில் பலரின் அவயவங்களை அகற்ற வேண்டிய பரிதாபம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: