22-03-09 அன்று ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ மாநகரின் ஜேன் (Jane) மற்றும் பிஞ் (Finch) சந்திப்பில் நடாத்தப்பட்ட இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழீழ மக்களிள் மீது சிறீலங்கா அரசு தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கையாக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
30 வருடங்களிற்கு மேலான தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் பாரிய பொருளாதார இழப்பினை சிறீலங்கா அரசானது அடைந்துள்ளது. இப் பொருளாதார இழப்பினை சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்கள் பெருமளவில் ஈடுசெய்கின்றது
மதியம் 1மணியளவில் ஆரம்பித்திருந்த இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு நிலத்திலே விரிக்கப்பட்டிருந்த சிறீலங்காக் கொடியிற்கு மேல் மக்களால் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உற்பத்திப் பொருட்கள் கொட்டப்பட்டன
அங்கு கொண்டுவந்து வீதியில் சிறீலங்காக் கொடியின் மீது கொட்டப்பட்ட சிறீலங்காப் பொருட்கள் பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. அத்துடன் அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும், சிறீலங்காவைப் புறக்கணிப்போம், சிறீலங்கா பொருட்களைப் புறக்கணிப்போம், சிறீலங்காவின் சேவைகளைப் புறக்கணிப்போம் எம் மக்களை நாம் பாதுகாப்போம் என்று உறுதியெடுத்துக்கொண்டனர்.