பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 ஆம்பிளை சில்க்....! ஹீரோவை பாராட்டிய இயக்குனர்

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

ஆம்பிளை சில்க்....! ஹீரோவை பாராட்டிய இயக்குனர் Empty
PostSubject: ஆம்பிளை சில்க்....! ஹீரோவை பாராட்டிய இயக்குனர்   ஆம்பிளை சில்க்....! ஹீரோவை பாராட்டிய இயக்குனர் EmptyFri Mar 20, 2009 1:35 pm

ஆம்பிளை சில்க்....! ஹீரோவை பாராட்டிய இயக்குனர் 242%20brammad
டாக்டர் ராம் நடிக்கும் 'பிரம்மதேவா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! 'இங்கே பெரிய பெரிய சர்ஜன்களெல்லாம் வந்திருக்காங்க. அவங்களை அன்போடு வரவேற்கிறேன்' என்றார் டாக்டர். மேடைக்கு கீழேயே நிறைய அறுவை(சிகிச்சை) நிபுணர்கள் இருந்ததால், பேசிய யாரும் அறுவை போடாதது ஆறுதல்! ஆச்சர்யம் என்னவென்றால், இதில் ராமுடன் சேர்ந்து மேலும் ஐந்து டாக்டர்கள் நடித்திருக்கிறார்களாம்.

முன்னதாக திரையிடப்பட்ட மூன்று பாடல்கள் நவரசம் என்றால் அதில் ஒரு ரசம் உச்சம்! ஆடியோவை வெளியிட வந்திருந்த டைரக்டர் வசந்த், 'ஆம்பிளை சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கிறார் கதாநாயகன் ராம்' என்று சொல்ல, அவரது ரசிகர்கள் பலமாக கைத்தட்டினார்கள். டாக்டர் ராம், தனது சிக்ஸ்பேக்ஸ் வயிற்றை முமைத்கான் வயிறோடு இணைத்து இணைத்து ஆடியதை பார்த்தால் பேஷண்டுகளே கூட 'பேஸ்த்' அடித்துப் போவார்கள். அந்தளவுக்கு கிளுகிளு...

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் போலும். வில்லேஜ் பேக் ட்ராப்பில் ஒரு காலை தாங்கி தாங்கி நடந்து கொண்டே பாடும் டூயட் ஒன்று இந்த ஆண்டின் சூப்பர் ஹிட்டாக விளங்கக் கூடும். (புதிய இசையமைப்பாளர் முத்துராஜுக்கு ஒரு ஓ....)

'நல்ல நேரத்திலே படம் எடுக்க வந்திருக்கிறார் டாக்டர் ராம். சின்ன படங்களுக்கு கட்டாயமாக தியேட்டர் கொடுக்கணும் என்ற முடிவை எடுத்து, அதை ஏப்ரல் 1 ந் தேதியில் இருந்து அமல் படுத்தப்போறோம். இந்த நேரத்தில் டாக்டர் ராம் நடித்த இந்த பிரம்மதேவா படத்திற்கு இரண்டு வாரம் தியேட்டர் உத்தரவாதம் உண்டு' என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன்.

திருச்சியில் பெரிய மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர் ராமின் பொழுதுபோக்கு கடலுக்குள் மூழ்கி கடல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதுதானாம். இப்போ சினிமாங்கிற கடலில் குதித்திருக்கிறார். கிடைப்பது முத்தாகவே இருக்கட்டும்...
Back to top Go down
 
ஆம்பிளை சில்க்....! ஹீரோவை பாராட்டிய இயக்குனர்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: சினிமா :: திரைச் செய்திகள்-
Jump to: