| ICRC - National Staff are working in puthumathalam area | |
|
|
Author | Message |
---|
Admin Admin
Posts : 45 Join date : 10/03/2009
| Subject: ICRC - National Staff are working in puthumathalam area Wed Mar 18, 2009 12:38 am | |
| முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து இன்று மாலை 5.40 அளவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் 481 காயமடைந்த பொதுமக்கள் புல்மோட்டை பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கைப் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களாவர். இவர்கள், புல்மோட்டையில் உள்ள கனிய மணல் திணைக்களத்தில் தங்கியுள்ள இந்திய மருத்துவர்களின் சிகிச்சைகளுக்காக சுமார் 10 பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று அழைத்து வரப்பட்டவர்களில் சிறுகாயங்களுக்கு உள்ளானவர்கள், சிகிச்சையளிக்கப்பட்டு வவுனியா செட்டிக்குளம் முகாமுக்கு அனுப்பப்படவுள்ளனர் கடுமையாக காயமடைந்தவர்கள், புல்மோட்டையில் உள்ள இந்திய மருத்துவ முகாம்களில் சிகிச்சையளிக்கப்படவுள்ளனர். இதேவேளை இதுவரை 11 தடவையாக முல்லைத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளவர்களின் தொகை நாலாயிரத்திற்கும் அதிகமாகும். | |
|
| |
Admin Admin
Posts : 45 Join date : 10/03/2009
| Subject: முல்லைத்தீவுக்கு மருந்து பொருட்களை ஐ.சி.ஆர்.சி. கப்பலில் அவசரமாக அனுப்புங்கள் Wed Mar 18, 2009 12:54 am | |
| முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதார சேவைக்கான மருந்து பொருட்களை அடுத்த சர்வதேச செஞ்சிலுவைக் கப்பலில் அனுப்பி வைக்குமாறு அரசாங்கம், செஞ்சிலுவைச் சங்கம், வவுனியா அரசாங்க அதிபர் ஆகியோர்க்கு மருத்துவர் ரி.வரதராஜன் மற்றும் மருத்துவர் ரி.சத்தியமூர்த்தி ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நான்கு மாதங்களாக போதுமான மருந்து வகைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிற்கு கிடைக்கவில்லை .கடந்த வருட இறுதி காலாண்டிற்கும், இவ்வருட முதல் காலாண்டிற்குமாக 5 சதவீதத்திற்கும் குறைவான மருந்து வகைகளும், துணி வகைகளும் கிடைக்கப்பெற்றன. 2009 ஜனவரி மாதம் வரை 500 பொதுமக்கள் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், பின்பும் உயிரிழந்துள்ளமை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேவேளை வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படாமலேயே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் படுகாயமடைந்தமையே உயிரிழப்பிற்கு காரணம். வைத்தியசாலைகளில் போதுமான மருந்துப் பொருட்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் காணப்பட்டிருப்பின் அதிகளவான உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம். எனினும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் அவசர உயிர்காப்பு சிகிச்சை கூட மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இது தொடர்பாகவும் மருந்து பொருட்களின் தேவைகள் குறித்தும் ஏற்கனவே இரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் அறிவித்திருந்தோம். மோதல்கள் காரண்மாக அதிகமானோர் காயமடைகின்றனர்.எனவே அதிகளவு மருந்துப் பொருட்கள் தேவைப்படுகின்றது. மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து மாகாண ஆணையாளர் அடுத்த தடவை கப்பல் வரும்போது அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்தார். எனினும் அவ்வாறு மருந்துப் பொருடகள் அக்கப்பலில் சுகாதார அமைச்சிலிருந்து அனுப்பி வைக்கப்படவில்லை என ஐ.சி.ஆர்.சி தமக்கு அறிவித்ததாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது நிலமையை கருத்திற் கொண்டு உயிரிழப்புக்களை மேலும் குறைப்பதற்கு உடனடியாக அடுத்துவரும் ஐ.சி.ஆர்.சி கப்பலில் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வரதராஜன் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.சத்தியமூர்த்தி ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். from > http://www.tamilwin.com/view.php?2a36QVH4b34Z9E834dbSWnPeb0217GGc4d2iYpD3e0d5ZLu2ce02g2hF2ccdFj0o0e | |
|
| |
baskar
Posts : 88 Join date : 11/03/2009 Location : canada
| Subject: Re: ICRC - National Staff are working in puthumathalam area Thu Mar 19, 2009 12:17 am | |
| வன்னியில் தொடரும் வடபகுதியின் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்து செல்வதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
மோதல்களால் இடம்பெயர்ந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் போதியளவு உணவு மற்றும் குடிநீர் இன்றி பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. “நிலைமை மோசமடைந்து செல்கிறது. அந்தப் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் பல்வேறு தடவைகள் இடம்பெயர்ந்துவிட்டனர். வெளியிலிருந்து செல்லும் உணவுப் பொருள்களை நம்பியே அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக் கிளையின் தொடர்பாடல் இணைப்பதிகாரி சோஃபி ரொமானென்ஸ் கூறியுள்ளார்.
நாளாந்தம் நடத்தப்படும் ஷெல் தாக்குதல்களால் அந்தப் பகுதிகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், போதியளவு உணவின்மை, போதியளவு குடி நீர் வசதியின்மை, சுகாதார வசதிகள் இன்மை போன்றவற்றால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தற்பொழுது ஏற்பட்டிருக்கும் மழையுடன் கூடிய காலநிலையால் இடம்பெயர்ந்த மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 1,258 குடும்பங்களைச் சேர்ந்த 3,686 பேர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து குடாநாட்டுக்கு வந்தவர்கள் கோப்பாய், மிருசுவில், கொடிகாமம், கைதடி, திருநகர், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருக்கும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சமைத்த உணவினை மாவட்ட செயலகமும், பிரதேச செயலகமும் வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இடம்பெயர்ந்து வந்திருக்கும் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அரசாங்க ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் தமது பணிகளை தொடர்வதற்கும் ஒழுங்கு செய்துகொடுக்கப்பட்டிருப்பதாகவும் கே.கணேஷ் தெரிவித்தார்.
இதுஇவ்விதமிருக்க, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சிலர் நேற்றையதினம் மழை வெள்ளம் மற்றும் காட்டுப் பகுதிகளால் கைக்குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் சகிதம் நடந்துவந்து பருத்தித்துறையை அடைந்திருந்தனர். | |
|
| |
haran
Posts : 66 Join date : 11/03/2009
| Subject: Re: ICRC - National Staff are working in puthumathalam area Fri Mar 20, 2009 1:39 am | |
| வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயம் என தாங்களாகவே இலங்கை அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி மீது நேற்று புதன்கிழமை தங்கள் படைகளே நடத்திய கடும் எறிகணைத்தாக்குதலில் 67 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவர் உட்பட 97பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், இடைக்காடு, முள்ளியவாய்க்கால் பகுதி மீது படையினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இற்த கொலை வெறித்தாக்குதலில் 30 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 45பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேபோன்று நேற்று புதன்கிழமை காலை முதல் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், இடைக்காடு ஆகிய பகுதி மீது விமானத்தாக்குதல்கள் மூலமும் இன அழிப்பை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்போது 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்பு நடவடிக்கைகளில் மக்கள் பாதுகாப்பு வலயம் பகுதிகளில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர் மீது படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது மகேந்திரராஜா ராம்குமார்(27வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவித்துள்ளன. | |
|
| |
haran
Posts : 66 Join date : 11/03/2009
| Subject: ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி:-------- செஞ்சிலுவை சங்கம் ஊடாக Sat Mar 21, 2009 1:26 am | |
| இலங்கையின் வடக்கே மோதல்களில் சிக்கியுள்ள மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் முகமாக செஞ்சிலுவை சங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் 3 மில்லியன் யூரோக்களை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் பாரிய மனிதாபிமான அவலம் நிலவுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில் சிக்கி நாளாந்தம் உயிரிழந்த வண்ணமுள்ளனர்.எறிகணை தக்குதல்களால் மட்டும் அவர்கள் உயிரிழக்கவில்லை போதிய உணவு , நீர் இன்றியும், மருத்துவ உதவியின்றியும் உயிரிழக்கின்றனரென ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி தொடர்பான ஆணையாளர் லூயிஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
மோதல் பிரதேசங்களில் சிறிய அளவு மனிதாபிமான உதவிகளே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,எனவே அம்மக்களை பாதுகாக்கவும், மனித அவலங்களை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அர்சாங்கம் மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாக்க எறிகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அத்துடன் மனிதாபிமான உதவிகளையும், போதுமான உணவு, மருந்துகளை அம்மகளிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் லூயிஸ் மைக்கேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் | |
|
| |
baskar
Posts : 88 Join date : 11/03/2009 Location : canada
| Subject: Re: ICRC - National Staff are working in puthumathalam area Sun Mar 22, 2009 2:35 am | |
| இலங்கையின் வடபகுதியில் அதிகரித்துவரும் மனிதாபிமான நெருக்கடிக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவும் நோக்கத்துடன் அதற்கு 30 இலட்சம் யூரோக்களை வழங்கவிருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மோதல் பகுதியில் சிக்குண்டு பலியாகிவருகின்ற நிலையில் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஷெல் வீச்சினால் மட்டுமன்றி உணவு, நீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் இந் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி ஆணையாளர் லூயிஸ் மக்கேல் தெரிவித்திருக்கிறார்.
இப்பகுதிக்கு சிறியளவான மனிதாபிமான உதவியே அனுமதிக்கப்படுகிறது. அங்கு மனித நெருக்கடியை தவிர்ப்பதற்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கமே மோதல் பகுதியில் மனிதாபிமான பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு பணியாற்றிவருகின்றது.அவர்கள் ஆபத்தான சூழ் நிலையில் சிக்குண்டுள்ள மக்களுக்கு யிரைப்பாதுகாப்பதற்கான உதவி வழங்குவதுடன் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்களை வெளியேற்றி வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பொறுப்புடன் பொதுமக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஷெல் தாக்குதலை நிறுத்தும் அதேநேரம் மனிதாபிமான ரீதியில் தேவையான உணவு, மற்றும் மருந்துகளை அப்பகுதிக்கு கொண்டு செல்லவும் காயப்பட்டவர்கள் மற்றும் நோயாளர்கள் வெளியேறுவதற்கு உதவியளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். | |
|
| |
haran
Posts : 66 Join date : 11/03/2009
| Subject: முல்லைத்தீவிலிருந்து மேலும் நோயாளர்கள் புல்மோட்டைக்கு வருகை Sat Mar 28, 2009 12:28 am | |
| முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் நேற்றிரவு மேலும் ஒரு தொகுதியினர் புல்மோட்டையை வந்தடைந்துள்ளனர். நோயாளர்கள், கர்ப்பிணிகள் மற்றும் யுத்தத்தில் காயமடைந்தவர்கள் என 120 பேர் அடங்கலாக 485 பேர் இக்கப்பல் மூலம் புல்மோட்டை வந்தடைந்துள்ளனர். குறிப்பிட்ட 120 பேரைத் தவிர்ந்த ஏனையோர் அவர்களின் உறவினர்களும் உதவியாளர்களும் என தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக கப்பல் பயணத்திலும் கப்பலிலிருந்து இவர்களை கரைக்கு கொண்டு வருவதிலும் தாமதங்கள் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கான உடனடி சிகிச்சைகள் புல்மோட்டை இந்திய தள வைத்திய சாலையில் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது | |
|
| |
haran
Posts : 66 Join date : 11/03/2009
| Subject: Re: ICRC - National Staff are working in puthumathalam area Sat Apr 04, 2009 6:44 pm | |
| வன்னியில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்டிருந்த 470 பேரும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் சிலரும் புதுமாத்தளனில் இருந்து, புல்மோட்டை வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பேச்சாளர் சரஸி விஜேரத்ன தெரிவித்தார். வன்னியில் இருந்து நோயாளர்களை வெளியேற்றி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுசெல்லும் 17ஆவது கட்ட நடவடிக்கையாக திருமலையில் இருந்து புறப்பட்ட கிறீன் ஓசன் கப்பல் நேற்று காலை புதுமாத்தளன் கடற்பரப்பை சென்றடைந்தததும் புதுமாத்தளன் தற்காலிக வைத்தியசாலையில் தங்கியிருந்த 470 நோயாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் அக்கப்பலில் ஏற்றப்பட்டு அங்க்pருந்து நேரடியாக புல்மோட்டைக்குச் சென்றது எனவும் அவர் தெரிவித்தார். நோயாளர்களை ஏற்றிச் சென்ற கிறீன் ஒசன் கப்பல் கடந்த சனிக்கிழமை தாக்குதலுக்கு இலக்கானது. ஆயினும் அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை ஒருதொகுதி நோயாளர்களும் நேற்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு தொகுதி நோயாளர்களும் கப்பல் மூலம் புல்மோட்டை கள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றார். வன்னியில் கடும் மோதல் இடம்பெற்று வருவதால் காயமடைந்தவர்களாக புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக இவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துப் பொருட்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவில் காயமடைந்த 7000 க்கு மேற்பட்ட நோயாளர்கள் இதுவரை ஐ.சி.ஆர்.சி. துணையுடன் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் | |
|
| |
baskar
Posts : 88 Join date : 11/03/2009 Location : canada
| Subject: Re: ICRC - National Staff are working in puthumathalam area Fri Apr 10, 2009 12:55 am | |
| சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்நாட்டுப் பணியாளர் ஓருவர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சின்னத்துரை குகதாசன் என்ற பணியாளரே இவ்வாறு எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கரையோரப் பகுதியில் உள்ள அம்பலவான்பொற்கேணி பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு நீர் விநியோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 2002ம் ஆண்டு முதல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நீர்க்குழாய் தொழில்நுட்பவியலாளராக குகதாசன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. புதுமத்தளான் பகுதியிலிருந்து சிவிலியன்களை அகற்றும் பணிகளிலும் குகதாசன் காத்திரமான பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்துரை குகதாசனின் இழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் கெஸ்டல்லா தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 4ம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் மற்றுமொரு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் வடிவேல் விஜயகுமார் என்பவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி : http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1239264523&archive=&start_from=&ucat=2& | |
|
| |
Sponsored content
| Subject: Re: ICRC - National Staff are working in puthumathalam area | |
| |
|
| |
| ICRC - National Staff are working in puthumathalam area | |
|