பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்  Empty
PostSubject: காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்    காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்  EmptyThu Aug 19, 2010 1:21 pm

காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்

நரம்புல எறும்பு ஊற வைக்துப்பா அந்த இன்டர்வெல்! ஃபஸ்ட் இயர் பையன் ஃபைனல் இயர் பொண்ணை விரட்டி விரட்டி லவ் பண்றான். காதலை சொல்லப் போற நேரத்துல என்னை அக்£ன்னு கூப்பிடுன்னு அந்த பொண்ணு சொல்ல, தியேட்டரே அதிருது. தமிழ்சினிமாவுல இப்படி ஒரு காட்சி இதுக்கு முன்னாடி வந்திருக்குமா? சும்மா பட்டைய கிளப்புற படம்யா இது!

மேக்னாவை பார்த்த முதல் பார்வையிலேயே 'அம்பேல்' ஆகி விடுகிற பாலாஜி, தேர்ட் இயர் ஸ்டுடன்ட்டுன்னு தெரிஞ்ச பிறகும் காதலை கன்ட்னியூ பண்ணுகிறார். இவரது மனம் கவர்ந்த மேக்னா சுந்தருக்கு இவரே 'மாம்ஸ்' வேலை பார்க்கிற நிலை. அதாவது மற்ற பசங்களின் காதலுக்கு து£து செல்கிறார். ஆனாலும் மனம் தளராத பாலாஜி ஊரான் காசில் தன் காதலை வளர்க்கிறார்.

அதற்கு பொருத்தமாக வந்து சேர்கிறான் அந்த சிங் பையன். நான் லவ் பண்றேன்னு அவகிட்ட சொல்லு. நான் கொடுத்தேன்னு இதை கொண்டு போயி கொடு என்றெல்லாம் அசைன்மென்ட் கொடுக்க, ஒருகட்டத்தில் பாலாஜியே சில பல ஐடியாக்களை கொடுத்து சிங்கின் காதலுக்கு சங்கு ஊதுகிறார். வெள்ளந்தியாக பழகும் மேக்னா, தம்பி வயசு பையனான பாலாஜியே தன்னை லவ் பண்றார்ன்னு தெரிந்து அதிர்கிறார். விடாப்பிடியாக லவ் பண்ணும் பாலாஜியும், வேண்டாம்ப்பா நீ என்று விலகும் மேக்னாவும் ஒன்று சேர்ந்தார்களா என்பது முடிவு.

ஒரு கல்லு£ரியும் வாலு பசங்க பத்து பேரும் கிடைச்சா சிரிப்புக்கு ஏது பஞ்சம்? அதுவும்
பூபதி பாண்டியனின் ஸ்கிரிப்ட்! நின்னா சிரிப்பு, நிமிர்ந்தா சிரிப்புன்னு குலுக்கி குலுக்கி அடிக்கிறாரு மனுஷன். பாலாஜியின் நண்பன் சபேஷ் கார்த்தியை வாயை திறக்காமலே மிரட்டும் அந்த முரட்டு பையன், ஒரு கட்டத்தில் 'மியாவ்' ஆகும்போது தியேட்டரே கந்தலாகிறது. ஒரு காமெடிக்கு சிரித்து முடிப்பதற்குள் அடுத்த காமெடி வந்து வயிற்றை பதம் பார்க்கிறது. "அவன் நல்லா வருவான்டா" என்று சிங் அவ்வப்போது பாராட்டுரைகளை வழங்குவதும் இதே டைப் காமெடி களேபரம்தான். படம் முழுக்க வருகிற கேரக்டர்களை விடுங்கள். பாஸிங்கில் வந்து போகிற ஆட்டோக்காரர் கூட அவர் பங்குக்கு ஒரு வெடியை கொளுத்திப் போடுகிறார்.

அந்த கேரக்டரோடு அப்படியே பொருந்தி விடுகிறார் பாலாஜி. என்னை அக்கான்னு கூப்பிடு என்று மேக்னா சொல்ல, வேறு வழியில்லாமல் அக்கா என்று சொல்லிவிட்டு அடுத்த கணமே வீட்டுக்கு போய் பினாயிலை ஊற்றி வாயை கழுவுவதை நினைத்து நினைத்து சிரிக்கலாம். சிரிப்புக்காதல் சீரியஸ் ஆகிவிடுகிற அந்த இரண்டாம் பாதியில் அவரது முகம் அப்படியே பரிதாபம் காட்டுவதும் ஆச்சர்யம். காதல் வந்ததும் கொசுவை கூட கொல்ல மனசில்லாமல் அதுவும் ஒரு உயிர்தானே என்று பம்முவதெல்லாம் பயங்கரம்டா சாமி.

மேக்னா சுந்தர் மற்றொரு நயன்தாராவேதான்! பல காட்சிகளில் பூ! பின் பாதியில் சருகு போலவும் இருக்கிறாரே, ஏங்க? ஆனாலும் ஹீரோவைவிட மூத்தவர் என்பதால் ஓ.கே.

தமிழ்சினிமாவில் கம்மி சம்பள காமெடியர்களுக்கு பஞ்சம் என்பதால் புதுமுகம் சபேஷ் கார்த்திக் அந்த வெற்றிடத்தை 'வாயு வேகத்தில்' நிரப்பலாம்! இவர் வந்தாலே தியேட்டர் அதிர்வதால் விரைவில் அதிக சம்பளக்காரர் என்ற இடத்தையும் பிடிக்கலாம்! கேஷ§வலாக கொளுத்திப் போடும் கேஸ் காமெடியெல்லாம் ரொம்ப ஓவர் தம்பி.

ஐந்து சீன் கூட வரவில்லை. ஆர்.சுந்தர்ராஜனின் எடக்கு பேச்சு மடக்கிப் போடுது ரசிகர்களை. நாய் வளர்த்தா பணம் வரும்னா திருச்சியிலேயே நான்தான் பெரிய பணக்காரனா இருப்பேன். உன்னையும் உங்கம்மாவையும் வளர்க்கிறேனே... (ஒரு பானை பிரியாணிக்கு ஒரு லெக் பீஸ்தான் இது)

யுவனின் இசையில் எல்லா பாடல்களும் தித்திப்பு. முக்கியமாக சாமி வருகுது பாடலுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கோரியோ கிராப் எக்சலண்ட்! ராணாவின் ஒளிப்பதிவும், பிரவீனின் படத்தொகுப்பும் கூட ஷார்ப் அன்டு ஸ்வீட்.

எல்லாம் சரி. அந்த க்ளைமாக்ஸ்தான் பெரிய ஆக்சிடெண்ட் படத்திற்கு! காதல் சொல்ல வந்தேனில் 'சொ'வுக்கு பதில் 'கொ' போட்டதுதான் கொடுமை!
Back to top Go down
 
காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தில்லாலங்கடி -திரை விமர்சனம்
» விருந்தாளி விமர்சனம்
» வம்சம் - விமர்சனம்
» ஆனந்தபுரத்து வீடு்- விமர்சனம்
» களவாணி-திரை விமர்சனம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: சினிமா :: திரை விமர்சனம்-
Jump to: