பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 பாணா காத்தாடி -விமர்சனம்

Go down 
AuthorMessage
Admin
Admin
Admin


Posts : 45
Join date : 10/03/2009

பாணா காத்தாடி -விமர்சனம் Empty
PostSubject: பாணா காத்தாடி -விமர்சனம்   பாணா காத்தாடி -விமர்சனம் EmptyThu Aug 12, 2010 1:48 pm

பாணா காத்தாடி -விமர்சனம்

பள்ளம் மேடு, பச்சை சிவப்பு எதையும் பார்க்காமல் காத்தாடி பிடிக்க ஓடும் சிறுசுகளை பார்த்து எரிச்சலடையும் சென்னை வாசிகளுக்கு பாணா காத்தாடி, அடி ஆத்தாடிதான்! விட்டால் ஒலிம்பிக்சில் பட்டம் விடுகிற போட்டியையும் சேர்க்க சொல்வார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு காத்தாடியின் முக்கியத்துவம் கழுத்தில் 'மாஞ்சா' போடுகிறது.

முதல் காட்சியே இப்படிதான் துவங்குகிறது. அறுந்து விழும் பட்டத்தை பிடிக்க ஆளாளுக்கு ஓடுகிறார்கள். வடசென்னை இளைஞன் அதர்வாவும் அப்படி ஓட, எதிரே வரும் ஃபேஷன் டெக்னாலஜி மாணவி சமந்தா மீது விழுகிறார். விழுந்தது கூட தெரியாமல் ஓடுகிறார். அப்போது சமந்தாவின் பென் டிரைவ், அதர்வாவுடன் போய்விட ஆறு மாசத்து படிப்பும் அதற்குள் இருப்பதால் காச் மூச் ஆகிறார் சமந்தா! அப்புறம் என்ன? அவரை தேடிப்பிடித்து பென் டிரைவுக்காக சண்டை போட, அதர்வா இல்லையென்று மறுக்க, பின்பு எப்படியோ கிடைக்கும் பென்-டிரைவ் காதலை விதைக்கிறது சமந்தாவின் மனசுக்குள். அந்த காதலுக்கும் வில்லனாக வருகிறது ஒரு சம்பவம். அதர்வா மீது தவறில்லை என்று உணரும் சமந்தா விரட்டி விரட்டி அவருடன் சேரும் நேரத்தில்தான் அப்படி ஒரு முடிவு. ('கொன்னு£ட்டிங்க' என்று பாராட்டு கிடைக்கும்னு நினைச்சிருப்பாரு போலிருக்கு டைரக்டர்)

'நிரந்தர' கல்லு£ரி மாணவர் முரளியின் வாரிசுதான் அதர்வா. சில காட்சிகளில் அப்பாவையே கலாய்க்கும் அவரது குசும்புக்கு செம கலாட்டவாகிறது தியேட்டர். என் பேரு இதயம் ராஜா என்று முரளியே வந்து முன்னோட்டம் கொடுப்பது இன்னும் ஜோர்... சரி பையன் எப்படி? சினிமா மேட்ரிமோனியலில் பனிரெண்டு பொருத்தமும் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது அதர்வாவிடம். சோகக் காட்சிகளில் கூட அநாயசமாக நடித்து தள்ளுகிறார் தம்பி! எப்போதும் சண்டை போடும் அம்மா, என் புள்ளை அப்படி பண்ணியிருக்க மாட்டான் என்று நம்பிக்கை காட்டும்போது கரகரவென்று கண்ணீர் வடிக்கிறாரே, அடி மனசில் ஒரு அச்சச்சோ எழுகிறது.

குலதெய்வமே வந்திரு... என்று ரசிகர்கள் உடுக்கையடிக்க வசதியாக ஒரு அழகான இறக்குமதி சமந்தா. ஸ்லம்முக்கே போய் தனது பென் டிரைவுக்காக சண்டை போடும் காட்சிகள் ரசனை. அதர்வா கொடுக்கிற அந்த பரிசை பார்த்து அதிர்ச்சியடைவதும், அவனை எனக்கு தெரியாது என்று போலீசிடம் போட்டுக் கொடுப்பதும் கதையின் அபாய வளைவு. அதற்கு பொருத்தமாக ஆயிரம் உணர்ச்சிகளால் நிறைந்திருக்கிறது சமந்தாவின் கண்கள். (கொஞ்சம் ஜாஸ்தி கொடுத்தாவது தமிழ்நாட்டு எல்லைய தாண்டாம பார்த்துக்கோங்க சாருங்களா)

படத்தை உசரத்தில் பறக்க விடுகிறார் கருணாசும்! எங்கப்பாவும் என்னை படிக்க வச்சிருந்தா அப்துல்கலாம் மாதிரி நானும் சைட்டிஷ் ஆயிருப்பேன் என்று கவலைப்பட்டே கலங்கடிக்கிற மனுஷன், அப்பாவின் பாக்கெட்டை லு£ட் அடிக்க போடுகிற திட்டம் இருக்கிறதே, சலம்புகிறது தியேட்டர் மொத்தமும். ஏதோ காண்டம் வாங்கி தொலைக்கிறார் என்று நினைத்தால் படத்திற்கே அதுதான்யா டேர்னிங் பாயின்ட்!

ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை தகுதிகள் இருந்தும் ஏன் ஒதுங்குகிறார் பிரசன்னா என்ற ஏக்கத்தை தருகிறது ஒவ்வொரு பிரேமும். தொழில் முறை ரவுடி கேரக்டரில் தன்னை அசால்ட்டாக பொருத்திக் கொள்கிறார். அதர்வாவை கொல்ல முடியாமல் அவர் தவிக்கிற தவிப்பை ஒரு மின்னலை போல கண்களில் காட்டுவதும் சூப்பர். (வட்டத்தை விட்டு வெளியே வாங்க பிரதர்)

விட்டால் ஓவர் ஆக்டிங் என்று அலத்துக் கொள்ள வைத்திருக்கும். ஆனால் ஒரு கோடு போட்ட மாதிரி தாண்டாமல் தாண்டவம் ஆடுகிறார் மவுனிகா. (ஹ¨ம், எவ்ளோ நாளாச்சுங்க) ஆமா, இன்ஸ்பெக்டர் சேரன் ராஜ் நல்லவரா, கெட்டவரா? திருநெல்வேலி சிங்கமாக சிலுப்பிகிட்டு நிற்பதும் ரசனைதான்! யுவனின் இசையும், ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

அந்த குஜராத் சீன்தான் ஏன்னு கடைசி வரைக்கும் புரிபடலே வாத்யாரே... குஜராத்ல பிறந்த காந்தி பட்டம் வாங்க ஃபாரின் போனார். இவய்ங்க பட்டம் விடுறதுக்காக குஜராத்துக்கு போறாங்கப்பா என்று டைமிங்காக போட்டு தாக்கினார் ரசிகர் ஒருவர். (ஏதோ இந்தளவுக்கவாது பயன்பட்டுச்சே...)

பட்டம் அழகு. நு£லின் அளவுதான் மீட்டருக்கும் மேல, கிலோ மீட்டருக்கும் கீழே!
Back to top Go down
https://kolusu.forumta.net
 
பாணா காத்தாடி -விமர்சனம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: சினிமா :: திரை விமர்சனம்-
Jump to: