பொய்கள் உண்மையான போது பொய்யான உண்மைகள். இலங்கையின் சரித்திரம் பொய் மயமானது. சூளகவம்சம் எனும் நுால் இலங்கையின் சரித்திரத்தைக் கூறும் நுாலாக இருந்தது. அது தமிழர்களையும் தமிழ் மன்னர்களின் ஆட்சியையும் உயர்வாகக் கூறியது. அது சிங்கள பேரினவாதிகளிற்கு ஏற்புடைத்ததாக இருக்கவில்லை. சூளகவம்சத்தை மாற்றி எழுதினர். பொய்களுடன் உருவானது மஹாவம்சம். மஹாவம்சம் தமிழர்களைத் தாழ்வானவர்களாகவும் கொடுமையானவர்களாகவும் சித்தரித்தது.
.
சிங்கள மனனர்களின் கோட்டைகள் தமிழ் மனனர்களால் முற்றுகையிடப் படும் போது சிங்கள மன்னர்கள் அரசியையும் இளவரசியையும் கோட்டைக்குள் விட்டுவிட்டுத் தப்பிச் செல்வார்களாம். பின்னர் தமிழர்கள் தம் பெண்களைத் பிடித்து வைத்துத் துன்புறுத்துவதாக தமது மக்களிடையே பொய்ச் செய்து பரப்பி மக்களைத் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்வார்களாம்.
.
பிரித்தானியா ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் வேண்டு மென்று முதல் போராட்டம் தொடங்கியது தமிழர்களே. சுதந்திரம் பெறும்போது தாம் சிறு பான்மை இனங்களுடன் ஒற்றுமையாக இருப்போம் என்று பொய் சொல்லியே சுதந்திரத்தைப் பெற்றனர்.
.
தனிச்சிங்கள சட்டத்தை தந்தை செல்வா அமைதியான முறையில் எதிர்த போது. யாழ்ப்பாணத்திலிருந்து தந்தை செல்வா சிங்களவர்களைத் தாக்குவற்கு கப்பலில் ஒரு பெரும் படையுடன் வருகிறார் என்று ஒரு பொய்ப் பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பிவிட்டு சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டி விட்டு பெரும் இனக்கொலையைச் செய்தனர்.
.
1977இல் யாழ்ப்பாணத்தில் சிங்களக் காவல் துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பெளத்த விஹரை தாக்கி அழிக்கப்பட்டதாக இலங்கை முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு ஒரு பொய்ச்செய்தி அனுப்பப்பட்டது. இதனால் நாடெங்கும் ஒரு தமிழினக் கொலை ஆரம்பித்தது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களவர்களையும் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களையும் எந்த பாதிப்புமின்றி தொடரூந்தில் தமிழ் இளைஞர்கள் அனுப்பி வைத்தனர். தொடரூந்து அனுராதபுரத்தை அடைந்ததும் சிங்கள மாணவிகளின் பாவாடைகளின் சிவப்பு மையை ஊற்றி அவர்களைத் தமிழர்கள் கற்பழித்ததாகவும் எல்லோரையும் அடித்துத் துரத்தியதாகவும் பொய்யுரைத்தனர். இதையடுத்து அனுராதபுரத்தில் தமிழினக்கொலை நடந்தது.
.
1977 இனக் கலவரத்தை அடுத்து தமிழர்களுக்கு எதிரான வன்முறை நாளாந்த நிகழ்வாக மாறியது. தமிழர்கள் தமது காவல்தெய்வமாக தமக்காகக் குரல் கொடுத்த இந்திராகாந்தி அம்மையாரை நம்பினார்கள். இந்திய உளவுத்துறை தமிழர்களிடை பல விடுதலை(?) அமைப்புக்களை உருவாக்கியது. தமிழ் ஆயுதப் போராட்டம் வலுவடைந்த நிலையில் அனுராதபுரத்தில் பெரியதாக்குதலை விடுதலைப் புலிகள் நடாத்திய போது இலங்கையின் எப்பகுதியிலும் இதைப் போன்ற தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவை நாடினர். தமது படை அமைதிப்படை என்று பொய் சொல்லிக் கொண்டுவந்த இந்தியப் படை தமிழின அழிப்பை மேற்கொண்டது. தமிழ்த்தேசிய வாதத்தை வலுவிழக்கச் செய்தது.
.
இந்திய அமைதிப் படையால் முகாமில் வைத்து தொடர்ச்சியாக கற்பழிக்கப் பட்ட பெண் தன் உயிரைக்கொடுத்து பழிதீர்த்தாள். தமிழர்கள் தான் பழிவாங்கியதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டட்து. இதைச் சாட்டாக வைத்து இலங்கையில் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாககப் பட்டுள்ளது. .
http://veltharma.blogspot.com/2009/05/blog-post_25.html