அடையாளம் காணப்பட்ட 18 பேரின் விவரம் அறிவிப்பு
வன்னியில் நேற்று நடந்த சண்டை யில் கொல்லப்பட்டவர்களில் 18 உயர்மட் டத் தலைவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாக பாதுகாப்பு அமைச்சுநேற்றிரவு தெரிவித்தது.
நேற்றைய சண்டையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயர்மட்டத் தலைவர்களுடன் கொல்லப்பட்டிருக்கிறார் என்று படையினர் நம்புகின்றனர். சடலங்களை அடையாளம் காணும் பணி தொடர்கின்றது என்றும் பாதுகாப்பு அமைச்சுதனது நேற்றிரவு புதுப்பிக் கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்தது.இதுவரை அடையாளம் காணப்பட்ட 18 பேரின் விவரங்களை பாதுகாப்பு அமைச்சுஅந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது. விவரம் வருமாறு:
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான்,
இராணுவப் பொறுப்பாளர் பானு, ஜெயம்,
அரசியல்துறைப் பொறுப்பாளர் பி.நடேசன்,
சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன்,
விசேட இராணுவப் பிரிவுப் பொறுப்பாளர் ரமேஸ்,
பொலிஸ் பொறுப்பதிகாரி இளங்கோ,
பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி
சுதர்மன் (சாள்ஸ் அன்ரனியின் உதவியாளர்),
தோமஸ் (சிரேஷ்ட தலைவர், புலனாய்வுத்துறை),
சிறிராம் (கடற்புலிகளின் சிரேஷ்ட தலைவர்),
அ.இசையருவி (பெண்கள் இராணுவப் பிரிவுத் தலைவர்),
கபில் அம்மான் (புலனாய்வுப் பிரிவு உதவித் தலைவர்),
அஜந்தி (பெண்கள் பிரிவு பயிற்சித் தலைவர்),
வர்தா (மோட்டார் பிரிவு பொறுப்பாளர்),
புதியவன் (பிரபாகரனின் செயலாளர்),
ஜெனர்தன் (விசேட படைத்தலைவர்)
ஆகியோரின் சடலங்களே அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சுதெரிவித்துள்ளது.