பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 பாடும் மாடல் அம்ருதா

Go down 
AuthorMessage
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

பாடும் மாடல் அம்ருதா Empty
PostSubject: பாடும் மாடல் அம்ருதா   பாடும் மாடல் அம்ருதா EmptyThu Mar 12, 2009 1:33 am

பாடும் மாடல் அம்ருதா 11-amrita-patki4-200மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஏர் என ஏகப்பட்ட அழகிப் பட்டங்கள், கை நிறைய விளம்பரப் படங்கள். இத்தனையையும் தாண்டி ஒரு பாடகியாகவும் படு பிசியாக இருக்கிறார் அம்ருதா பட்கி.

ஒல்லிக் குச்சி உடம்புக்காரியான பட்கி, 2006ம் ஆண்டு மிஸ் எர்த் ஏர் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் மிஸ் இந்தியா எர்த் பட்டத்தையும் பெற்றார்.

நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், பான்டலூன், ஜாய் அலுக்காஸ் உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களை இவரைப் பார்த்திருப்பீர்கள்.

இப்போது பட்கி பாடகியாகி விட்டார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட படம்தான் அவன், அவள், அது. இப்படத்தின் இரு பதிப்புகளிலும் பட்கி பாடியுள்ளார்.

பாடல் வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு வந்திருந்தார் பட்கி. மாடல் அழகியான நீங்கள் பாடல் அழகியானது எப்படி என்று கேட்டபோது, இசையைப்பாளர் தரண் எனது நண்பர். வித்தியாசமான குரலை அவர் தேடிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போதுதான் எனது குரல் அவருக்குப் பொருத்தமானதாக தோன்றியிருக்கிறது. தெலுங்குப் பதிப்பில் பாடச் சொன்னார். தமிழிலும் பாட வைத்து விட்டார். எனது பாடல்கள் ஹிட் ஆகும் என நம்புகிறேன் என்கிறார்.

ஏன் இவ்ளோ உயரமாக இருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் எப்போதுமே இப்படித்தான். மற்றவர்களை விட நல்ல உயரம். ஆனால் உடம்பு முன்பு ரொம்ப குண்டாக இருந்தது. கஷ்டப்பட்டு எடையைக் குறைத்து இடையழகி ஆனேன்.

எனக்கு முதலில் பாடகியாக வேண்டும் என்ற கனவுதான் இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக மாடலிங்கில் புகுந்து விட்டேன். எனது குழந்தைப் பிராயத்து கனவு பாடகியாவது. இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது என்கிறார் சிரித்தபடி.

இவ்ளோ க்யூட்டாக இருக்கும் பட்கியைத் தேடி பட வாய்ப்புகள் வராமல் இருக்குமா.. வந்ததாம். சில படங்கள் வந்துள்ளன -பாலிவுட் மற்றும் கோலிவுட்டில். யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு மணி ரத்ணம் படத்தில் நடிக்க கொள்ளை ஆசை, பார்க்கலாம் நிறைவேறுகிறதா என்று என்கிறார் ஏக்கத்துடன்.

பட்கி ஏக்கத்தை மணி நிறைவேற்றுவாரா?
Back to top Go down
 
பாடும் மாடல் அம்ருதா
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: சினிமா :: திரைச் செய்திகள்-
Jump to: