முல்லைத்தீவுக் கடலில் தீர்த்தமாடி கொடியிறக்க வேண்டிய நிலை !உலக நாடுகள் எதிர் பார்ப்பதுபோல பிரபாகரன் முட்டாள் அல்ல !
தாடியும் மீசையுமாக பொந்துக்குள்ளால் வெளிவர சதாம் உசேனும் அல்ல !
மற்றவர் நினைப்பதைப் போல சரணடையுமளவிற்கு தன்மானம் இழந்தவருமல்ல !
வீர வசனம்பேசி தூக்குக் கயிற்றை முத்தமிட வீரபாண்டிய கட்டப்பொம்மனுமல்ல !
இராணுவம் எட்டு கிலோமீட்டர்கள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். 1974ம் ஆண்டு
கலைஞர் ரீ.வி யுத்த நிறுத்தம் என்கிறது ! அதை மறுக்கிறது சிங்கள அரசு !
சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தம் ஒன்றை வழங்க உடன்பட்டுவிட்டதாக தெரிவித்து இன்று காலை தமிழக முதல்வர் மு.கருணாநிதி உண்ணாவிரதமிருந்து மதியமே அதை முடித்துக் கொண்டார். சிறீலங்கா அரசு யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்திருப்பதால் தாம் உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதுவரை வெளியாகிக் கொண்டிருக்கும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கை சிறீலங்காவில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறிவருகிறது. அதுதவிர கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்றோர் கலைஞரின் முயற்சியால் யுத்த நிறுத்தம் வந்ததாக தெரிவிக்கிறார்கள். மறுபுறம் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் 24 மணி நேரங்களில் நல்ல செய்தி வரலாம் என்று தெரிவிக்கிறார்.
யுத்த நிறுத்தம் ஒன்றை தாம் செய்ய இருப்பதை சிறீலங்கா இந்தியாவிற்கு இரகசியமாக அறித்துள்ளதால் கலைஞர் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளாரா என்பது தெரியவில்லை. அல்லது இப்படியொரு முடிவு வரவிருக்கிறது என்பதை இரகசியமாக அறிந்துதான் அவர் உண்ணாவிரதத்தை அரங்கேற்றினாரா என்பதும் சந்தேகம் தருவதாகவே உள்ளது.
மறுபுறம் கடந்த நவம்பருக்குள்ளேயே போரை முடிப்போம் என்று கூறி பணத்தை வேண்டி களமிறங்கிய சிங்கள இராணுவம் இந்தியத் தேர்தலின் முக்கியமான கட்டம் வந்தும் அதை முடிக்க முடியாமல் திணறுவது பலருக்கு சினத்தை உருவாக்கியிருக்கிறது.
நாலே நாட்களில் போரை முடித்துவிடுவோம் என்று கோத்தபாய ராஜபக்ஷ இந்த நெருக்குதலுக்கு பதில் கொடுத்திருந்தார். அவருடைய கணிப்பின்படி வரும் புதன்கிழமையுடன் போர் முடிய வேண்டும். அதை நம்பி பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர், பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சர், சுவீடன் வெளிநாட்டு அமைச்சர் ஆகிய மூவரும் வரும் புதன் சிறீலங்கா புறப்படுகிறார்கள். வியாழன் மகிந்தராஜபக்ஷ வெற்றிக் கொடி பறக்கவிட சல்யூட் அடிக்கப் போகிறார்களோ என்று எண்ணுமளவிற்கு இருக்கிறது இவர்களின் தாமதமான பயணம். அதேவேளை பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மிலிபிரான்ட் சற்று முன் மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் அவசரமாக பேசி புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்க வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த இக்கட்டான நெருக்கடியில் பிரபாகரனைப் பிடிக்க கடைசி இடத்திற்குள் நுழைந்திருக்கிறது இராணுவம். இதை இப்படியொரு ஓவியமாக வரையலாம் :
இராணுவம் என்ற களைத்துப்போன கழுதையின் முன்னால் பிரபாகரன் என்ற கரட் தொங்குகிறது. அதைக் கடிக்க அது வேகமாக ஓடுகிறது. பாதுகாப்பு செயலர் நாராயணன் கோத்தபாயவின் முதுகில் சவுக்கால் அடிக்க அவர் கழுதையை விரட்டுகிறார். இருந்து பாருங்கள் நாலு நாளில் கரட்டைக் கடித்துவிடும் கழுதை என்று கூறியிருக்கிறார்.
சிறீலங்காவின் இராணுவம் அங்கு போய்ச் சேரும், ஆனால் பிரபாகரன் இராணுவக் கழுதையிடம் பிடிபடமாட்டார். கடைசியில் கரட்டைக் கடிக்கப்போகும் கழுதை முல்லைத்தீவு கடலில் தீர்த்தமாடிய கதையோடு யுத்த நிறுத்தம் செய்து கொடியிறக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். மாவிலாறிலிருந்து கரட்டை விரட்டும் கழுதை நந்திக்கடலில் வந்தா கரட்டைக் கவ்வப்போகிறது என்று சுயமாக யோசிக்க சிலருக்கு நேரமில்லை.
எஞ்சியுள்ள எட்டுக் கிலோமீட்டர்கள் நிலப்பரப்பு சைபர் கிலோமீட்டர்களாகும், அப்போது முல்லைத்தீவுக் கடல்தான் இராணுவத்திற்கு பரிசாகக் கிடைக்கும். இதை நாம் மூன்று மாதங்களின் முன்பே கூறியிருக்கிறோம்.
உலக நாடுகள் எதிர் பார்ப்பதுபோல பிரபாகரன் முட்டாள் அல்ல !
தாடியும் மீசையுமாக பொந்துக்குள்ளால் வெளிவர சதாம் உசேனும் அல்ல !
மற்றவர் நினைப்பதைப் போல சரணடையுமளவிற்கு தன்மானம் இழந்தவருமல்ல !
வீர வசனம்பேசி தூக்குக் கயிற்றை முத்தமிட வீரபாண்டிய கட்டப்பொம்மனுமல்ல !
இராணுவம் எட்டு கிலோமீட்டர்கள் நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். 1974ம் ஆண்டு கம்பர்மலை நெற்கொழு ஆலமரத்தில் பிரபாகரன் மறைந்திருக்க, அவருக்கு கீழே இரண்டு மீட்டர்கள் இடைவெளியில் அதே ஆலமரத்திற்குக் கீழேதான் இராணுவம் பிரபாகரனைத் தேடிக் கொண்டு நின்றது. அப்படிப்பட்டவருக்கு நாலு நாட்களும், எட்டுக் கிலோ மீட்டர்களும் மிகமிக அதிகமான நேரமும், அதிகமான தூரமுமாகும்.
இன்று ஐ.நா பாதுகாப்பு சபைவரை பிரபாகரனைத் தேடுமளவிற்கு அவர் வளர்ந்திருக்கிறார். அண்டவெளி சற்லைற்றுக்களுக்கும் ஆப்பு வைக்கப்போகிறார் என்பதை அறிய மேலும் மூன்று தினங்களே உள்ளன.
http://www.alaikal.com/news/?p=15610