பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  SearchSearch  RegisterRegister  Log in  

 

 சென்னை போடா வெண்ணை என்றது

Go down 
AuthorMessage
baskar

baskar

Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

சென்னை போடா வெண்ணை என்றது Empty
PostSubject: சென்னை போடா வெண்ணை என்றது   சென்னை போடா வெண்ணை என்றது EmptyWed Apr 15, 2009 6:15 pm

சென்னை போடா வெண்ணை என்றது

அண்மைய ஈழப்போரில் ஏற்படுகிற அழிவுகளுக்கு இந்திய தொடர்பினை அம்பலப்படுத்தி செய்திகள் வருகின்றன. புலிகளின் தாக்குதல்களில் சிதைந்த 58வது படைப்பிரிவினை நிரப்பியும் 59வது படைப்பிரிவின் அரைவாசியிலுமாக இந்தியப் படையினர் பங்கு கொள்வதாக ஒரு செய்தியில் படித்தேன். 200 வரையான இந்திய இராணுவ உடலங்கள் பூனேக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அச்செய்தி சொல்கிறது.

தாக்குதல்களைக் குறிப்பிட்டு அச்சொட்டாக இந்திய இராணுவத் தொடர்புகள் குறித்து வரும் செய்திகளை உறுதிப்படுத்துவது கடினமாக இருக்குமே தவிர இந்த யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பும் இலங்கைக்கான அதன் ஆசீர்வாதமும் வேறெவரும் இந்தச் சிக்கலில் நேரடியாகத் தலையிட முடியாதவாறான ஒரு தடுப்புச் சுவரான செயற்பாடும் எவராலும் மறைக்க முடியாதவை. இந்தியா புலிகளோடு இரண்டாவது யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கிறது என்பதுவே நிஜம்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்த மறைந்திருந்து தாக்கும் ராமனை எவ்வாறு எதிர்கொள்வது என தெரியவில்லை. கடந்து போகவும் முடியவில்லை. உலகத் தெருக்களெங்கும் மாங்கு மாங்கு எனக் கத்தினாலும் ஈழப்பிரச்சனையில் இந்தியாவைத் தாண்டி ஒரு மயிரையேனும் புடுங்க முடியாது என்பதுதான் கசக்கும் நிஜம். பிராந்தியங்களாக பிரிக்கப் பட்டிருக்கும் உலகில் நமது நாட்டாண்மை இந்தியா என்பதுதான் உலக நாட்டாண்மைகளுக்கிடையிலான பொது உடன்பாடு. இலங்கைச் சிக்கலில் இந்தியாவே கும்பிடு போடுகின்ற, வாலாட்டுகின்ற வல்லரசு நாடுகள் தவிர்ந்த வேறு எந்த நாடேனும் இதயசுத்தியுடன் செயற்படத் துணிந்தாலும் நந்தியான இந்தியா விலகவே விலகாது.

**இன்று தமிழக நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்தியாவுடனான நமது அணுகுமுறைகள் குறித்து காரசாரமான கருத்துக்களை கொண்டிருந்தார் அவர். அவர் சொல்கிறார்..

91 இல் ஈழத்தமிழர்கள் அல்லது புலிகள் இந்திய அதிகார மையத்திற்கு எதிரான ஒரு பெரும் போரைப் பிரகடனம் செய்திருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ போர் முடிந்ததாய் நினைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் 87 இல் இயங்கத் தொடங்கி அப்போர் 91 இல் பெரு வேகமெடுத்தது என்பதுதான் உண்மை. அதன் பிறகு அது குறித்து நீங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அங்கேதான் உங்களது தவறு நிகழ்கிறது.

91 இன் செயல் சரி தவறு என்பவற்றுக்கு அப்பால் அவ்வாறான செயலைத் துணிந்த நீங்கள் அதற்கான இந்திய எதிர்வினைகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு உங்களைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். தயார்ப்படுத்தலென்பது யுத்தமொன்றை நேரடியாக எதிர்கொள்வது என்ற அர்த்தத்தில் அல்ல! பதிலாக இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் நெருங்கிக் கொள்வதுதான். உதாரணம் பாகிஸ்தான்!

ஆனால் நீங்களோ அவ்வாறு நெருங்கினால் தந்தையர் நாடு மனஸ்தாபப்படும் தொப்புள் கொடி உறவு அறும் என வார்த்தைகளில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தீர்கள். அவ்வாறு இருந்தால் இப்படித்தான் மூக்கிலும் முதுகிலும் குத்து வாங்கி ரத்தம் வழிய வேண்டியிருக்கும் என்றார் அவர். அது அவரது கருத்து.

**நான் எப்போதும் சொல்வது போல கலைஞர் அவர்களால் இவ்விடயத்தில் காத்திரமாக எதையும் செய்ய முடிகிற நிலை இல்லை என்பதைத்தான் இன்னமும் நம்புகிறேன். இது இவ்வாறு இப்படி நடக்கும் என மத்திய அரசால் அவருக்கு அறிவுறுத்தப் பட்ட பிறகு பாவம் அவரென்ன செய்ய முடியும்? அதுபற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனால், உலகில் எந்த மூலையிலேனும் எந்த ஒரு நாட்டிலேனும் எவரேனும் இலங்கை தொடர்பில் அக்கறையுற்று குசு விட்டால் கூட அதை மணந்து பிடித்து - உடன்பிறப்பே பார். எனது அயராத உழைப்பினாலும் விடாத வேண்டுகோளினாலும் இந் நபர் இலங்கையில் அமைதி வேண்டுமென சொல்லியிருக்கிறார். இது நமக்கு கிடைத்த வெற்றியன்றோ என எழுதிக் கொல்வது தான் கடுப்பேற்றுகிறது. அவரென்ன செய்வார். நம்பத்தான் ஆட்கள் இருக்கிறார்களே..

**ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை சில மாதங்களுக்கு முன்பு படித்திருந்தேன். அப்போதுதான் தமிழகத்தில் 2 வார காலக்கெடு மேடை நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன. மு.திரு ஒரு விடயத்தை முன்வைத்திருந்தார். ஈழத் தமிழர்களின் சுபீட்சமான வாழ்க்கைக்கான திறவுகோல் சென்னையிலிருந்து புதுடில்லி ஊடாக உலகத்திடம் உள்ளது என அவர் தர்க்க ரீதியாக ஆராய்ந்திருந்தார்.

அதாவது சென்னையில் ஏற்படுத்தப்படும் அரசியல் அழுத்தம் புதுடில்லியில் பிரயோகிக்கப் பட்டு அதனூடா உலக அரங்கில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே அதன் சாராம்சம். அப்போதைய சம்பவங்களோடு ஒட்டி நோக்குகையில் அதோ தெரியுது விடிவெள்ளி என்பது போலத்தான் இருந்தது.

ஆனால்…

சென்னையிலிருந்து புதுடில்லி ஊடாக உலகத்திடம் திறவுகோல் என எதிர்பார்த்து நிற்கையில்..

சென்னை போடா வெண்ணைய் என்றது.

நம்புவியோ இனியும் நம்புவியோ என எங்கள் குண்டிகளில் யாரேனும் பழுக்க காய்ச்சிய கம்பிகளால் சூடு வையுங்கள்.

http://blog.sajeek.com/
Back to top Go down
 
சென்னை போடா வெண்ணை என்றது
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: இந்தியப் பக்கம்-
Jump to: