பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

Go down 
3 posters
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Empty
PostSubject: பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !   பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! EmptyWed Mar 11, 2009 9:58 pm

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

பிரித்தானியாவின் பல பாகங்களில் உணவு சேமிப்பு நிலையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு உலர் உணவுப்பொருட்களை மக்கள் சென்று வழங்கமுடியும். உடைகள் மற்றும் இலங்கைத் தயாரிப்பான உணவு வகைகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலை நிவாரண கப்பல் என்று கூறாது “வணங்கா மண்” என பெயரிட்டதன் காரணம், உலகநாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் கொடூரமான எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதலுக்கு உள்ளாகி, மிகமோசமான உணவு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தும், சிங்கள இனவாதிகளுக்கு தலைவணங்காது நிற்கும் எம் தமிழ் மக்களுக்காக எம்மவர்களால் அனுப்பப்படும் கப்பல் என்பதாலாகும்.

புலம் பெயர் வாழ் தமிழர்களே! விரைந்து செயல்பட்டு உணவுகளை வழங்குங்கள். இந்த கப்பலை வெற்றியாக முல்லை துறைமுகத்திற்கு கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்களோடு தோளோடு தோள் நின்று உதவுங்கள், என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

இச் சந்தர்ப்பத்தை தவறவிடின் இனி எச் சந்தர்ப்பத்தில் நாம் வன்னி மக்களை காக்கப் போகிறோம்…!
Back to top Go down
vithu




Posts : 9
Join date : 11/03/2009

பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Empty
PostSubject: Re: பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !   பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! EmptyMon Mar 16, 2009 11:08 am

பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Uk_20090315007
தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அனைத்துலக சமூகம் மற்றும் மனிதநேய அமைப்புக்கள் கைவிட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் நோக்கி ‘வணங்கா மண்’ என்ற கப்பல் முதல் தடவையாக புறப்பட உள்ளது.

தாயகம் நோக்கிய இந்த ‘வணங்கா மண்’ என்ற கப்பல் பயணத்திற்கான முதல் நடவடிக்கையாக நேற்று சனிக்கிழமை முதல் பிரித்தானியாவில் பல பாகங்களிலும் உலர் உணவு மற்றும் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் சேகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சேகரிப்பு நிலையங்களுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், பாடசாலை மற்றும் கல்லூரி பணியாளர்கள், மருத்துவர்கள், வர்த்தகர்கள், ஊடகவியளாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பட்டோரும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

அத்துடன் ‘வணங்கா மண்’ ஒருங்கினைப்புக் குழுவினருக்கு தங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

பிரித்தானிய புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் ஆழிப்பேரலைக்குப் பின்னர் தற்போதைய தாயகம் நோக்கிய ‘வணங்கா மண்’ நடவடிக்கையில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் பல பாகங்களிலும் உள்ள சேகரிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு:

ரூட்டிங் சிவயோகம் மண்டபம்: Mr Sadiq Khan MP, Under-Secretary of State in the Department for Communities and Local Government.

சிறீ செல்வ விநாயகர் ஆலயம்: Mr Toby Boutle Conservative PPA

ஈஸ்காம் நிகழ்வில்: Mr Neal Pearce By election candidate for (MP) for royal dock Newham Conservative party, Mrs Neal Pearce , Mr Sheik conservative councillor for Hackney, Mr Akram president conservative party East Ham and Mr Graham National Liberal spokes person

என்பில்ட் நாகபூசனி அம்மன் கோயில் நிகழ்வில்: ஆலய மதகுரு

ஆர்சிக்கு முன்னால்: Mr Lee Scott MP Ilford North and Clayhall Conservative Leader of the Council Alan Edward Weinberg.
Back to top Go down
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Empty
PostSubject: Re: பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !   பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! EmptySun Mar 22, 2009 2:51 am

வன்னியில் இராணுவத்தின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பாத நிலையில் புலம்பெயர் மக்களினால் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுவரும் "வணங்காமண்" உணவு கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்படும் என இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றினால் 2,000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் விடுதலைப்புலிகளின் வணங்காமண் என்ற கப்பலில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த தமிழ் அமைப்பு விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டது எனவும் இது குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முற்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

ஒபரேஷன் வணங்கா மண் என்ற இந்த கப்பல் பிரித்தானியாவில் இருந்து புறப்பட்டு இலங்கையின் எதிர்ப்பையும் மீறி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழையும் என பிரித்தானிய தமிழ் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"வணங்கா மண்" கப்பலின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து கடற்படையினர் லண்டனில் உள்ள சர்வதேச லொயிட் நிறுவனத்திடம் விசாரித்துள்ளதாகவும் , எனினும் இந்த கப்பல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது
Back to top Go down
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Empty
PostSubject: Re: பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !   பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! EmptyThu Mar 26, 2009 11:34 pm

வணங்க மண் கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலண்டனில் இருந்து தாயகம் நோக்கிப் புறப்படு மென்று வணங்கா மண் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம்திகதி; அளவில் இக்கப்பல் முல்லைத்தீவிற்கு கிழக்கான கடல் எல்லையை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மக்களுக்கான பொருள் சேகரிப்பு பெரும் எழுச்சியாக இலண்டனில் நடைபெற்று வரு கின்றது. பெருமளவு மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். வணங்காமண் கப்பலில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Back to top Go down
baskar

baskar


Posts : 88
Join date : 11/03/2009
Location : canada

பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Empty
PostSubject: Re: பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !   பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! EmptyWed Apr 01, 2009 2:55 am

வன்னியில் யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காகப் பிரிட்டனிலிருந்து ‘வணங்கா மண்” (வன்னி மிஷன் ஷிப்) என்ற நிவாரணக் கப்பல் இன்று (31) புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வன்னி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய,உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டே இந்தக் கப்பல் இன்று புறப்பட்டுள்ளது.

500 தொன் பொருட்களுடன் புறப்பட்டுள்ள இந்தக் கப்பலில் டாக்டர்கள் குழுவொன்றும் இடம்பெற்றள்ளது. முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இந்தக் கப்பலை நிறுத்தி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சுச் செயலாளர் பாலித கொஹனவையைத் தொடர்பு கொண்டு லங்கா ஈ நியூஸ் கேட்டபோது. இவ்வாறான கப்பலொன்று புறப்படுவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லை.

அவ்வாறு இலங்கையின் கடற்பரப்புக்குள் இந்தக் கப்பல் நுழைந்தால் சர்வதேச கடல் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எமது கடற்படையினரூடாகக் குறிப்பிட்ட கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வந்து முழுமையான சோதனையொன்றுக்கு உட்படுத்தி அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.

செஞ்சிலுவைச் சங்கத்திடம் இதுகுறித்து கேட்கப்பட்ட போது இணைய தளத்தில் பார்த்ததைத் தவிர வேறெந்த தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Back to top Go down
Sponsored content





பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Empty
PostSubject: Re: பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !   பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! Empty

Back to top Go down
 
பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிறையில் இருந்து வந்து சீறிப்பாயும் சீமான்
» அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
» வன்னியில் இருந்து திருமலை வருவோரில் பலரின் அவயவங்களை அகற்ற வேண்டிய பரிதாபம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: