பல்சுவை கதம்பம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பல்சுவை கதம்பம்


 
HomeHome  GalleryGallery  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log in  

 

 38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்டனுக்கு கடிதம்

Go down 
AuthorMessage
haran

haran


Posts : 66
Join date : 11/03/2009

38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்டனுக்கு கடிதம் Empty
PostSubject: 38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்டனுக்கு கடிதம்   38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்டனுக்கு கடிதம் EmptyFri Mar 13, 2009 12:22 pm

இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் இனப் படுகொலைக்கும், மனிதப் பேரழிவுக்கும் உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலறி கிளின்டனுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். இதே போல ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைசுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு ஆபத்து குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக காலம் தாழ்த்தப்பட்டு வரும் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், ரொம் லான்டொஸ் மனித உரிமைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணியில் இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டான் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

http://www.paristamil.com/tamilnews/?p=32155
Back to top Go down
 
38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்டனுக்கு கடிதம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சோனாலி விக்ரமதுங்க ஆய்வாளருக்கு அனுப்பிய கடிதம்
» அமெரிக்க அணுகுமுறை மாற்றத்தை வரவேற்கிறோம் - விடுதலைப் புலிகள்
» அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தான் போரில் தோல்வி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
பல்சுவை கதம்பம் :: செய்திகள் :: ஈழப் பக்கம்-
Jump to: